1
உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண் வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலேதெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந் திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
உரித்தவன்காண், உரக்களிற்றை உமையாள் ஒல்க; ஓங்காரத்து ஒருவன்காண்; உணர்மெய்ஞ் ஞானம்விரித்தவன்காண்; விரித்தநால் வேதத் தான்காண்; வியன்உலகில் பல்உயிரை விதியி னாலேதெரித்தவன்காண்; சில்உருஆய்த் தோன்றி எங்கும் திரண்டவன்காண்; திரிபுரத்தை வேவ வில்லால்எரித்தவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.