1
கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளைநீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
சொற்பிரிப்பு
கூற்றுவன்காண், கூற்றுவனைக் குமைத்த கோன்காண், குவலயன்காண், குவலயத்தின் நீர்ஆ னான்காண்,காற்றுஅவன்காண், கனல்அவன்காண், கலிக்கும் மின்காண், கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை-நீற்றவன்காண், நிலாஊரும் சென்னி யான்காண், நிறைஆர்ந்த புனல்கங்கை நிமிர்ச டைமேல்ஏற்றவன்காண் - எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி ஏகம்பன் காண்;அவன்என் எண்ணத் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.