1
முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கேதன்னானை யாப்பண்ணி யேறி னானைச் சார்தற் கரியானைத் தாதை தன்னைஎன்னானைக் கன்றினையென் ஈசன் றன்னை எறிநீர்த் திரையுகளுங் காவி ரிசூழ்தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
சொற்பிரிப்பு
முன்ஆனைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை; மூவாத சிந்தையே, மனமே, வாக்கே,தன்ஆனை யாப்பண்ணி ஏறி னானைச்; சார்தற்கு அரியானைத்; தாதை தன்னை;என்ஆனைக் கன்றினை;என் ஈசன் தன்னை; எறிநீர்த் திரைஉகளும் காவி ரிசூழ்தென்ஆனைக் காவானைத்; தேனைப்; பாலைச்; செழுநீர்த் திரளைச்;சென்று ஆடி னேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.