1
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன்அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
சொற்பிரிப்பு
எத்தாயர், எத்தந்தை, எச்சுற் றத்தார்,- எம்மாடு சும்மாடாம்? - ஏவர் நல்லார்?செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை; சிறுவிறகால் - தீமூட்டிச் செல்லா நிற்பர்;சித்தாய வேடத்தாய்! நீடு பொன்னித் திருஆனைக் காஉடைய செல்வா! என்தன்அத்தா!உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,- அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.