1
மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்நாதனே யென்றென்று பரவி நாளும் நைந்துருகி வஞ்சகமற் றன்பு கூர்ந்துவாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக்காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
சொற்பிரிப்பு
“மாதினைஓர் கூறுஉகந்தாய்! மறைகொள் நாவா! மதிசூடீ! வானவர்கள் தங்கட்கு எல்லாம்நாதனே!” என்றுஎன்று பரவி, நாளும் நைந்துஉருகி, வஞ்சகம்அற்று, அன்பு கூர்ந்து,வாதனையால் முப்பொழுதும் பூ,நீர் கொண்டு வைகல் மறவாது, வாழ்த்தி ஏத்திக்,காதன்மையால் - தொழும்அடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.