திருமுறை 6 · 6.060 · 10

திருக்கற்குடி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கற்குடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்றார்த்தவனை அக்கரவம் ஆர மாக அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போடேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க் கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனைத்; திருஅரையில் மூக்கப் பாம்புஒன்றுஆர்த்தவனை; அக்கு,அரவம், ஆரம் ஆக அணிந்தவனைப்; பணிந்துஅடியார் அடைந்த அன்போடுஏத்தவனை; இறுவரையில் - தேனை, ஏனோர்க்கு; இன்அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்காத்தவனைக்; கற்குடியில் விழுமி யானைக்; கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத் திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னைஐயானை நொய்யானைச் சீரி யானை அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்கையானைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
செய்யானை, வெளியானைக், கரியான் தன்னைத், திசைமுகனைத், திசைஎட்டும் செறிந்தான் தன்னை,ஐயானை, நொய்யானைச், சீரி யானை, அணியானைச், சேயானை, ஆன்அஞ்சு ஆடும்மெய்யானைப், பொய்யாதும் இல்லான் தன்னை, விடையானைச், சடையானை, வெறித்த மான்கொள்கையானைக், கற்குடியில் விழுமி யானைக்; கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டைவிண்ணதனி லொன்றை விரிக திரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்கஎண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன் எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
மண்அதனில் ஐந்தை;மா நீரில் நான்கை; வயங்குஎரியில் மூன்றை;மா ருதத்துஇ ரண்டை;விண்அதனில் ஒன்றை; விரிக திரைத்; தண்மதியைத், தாரகைகள் தம்மில் மிக்கஎண்அதனில் எழுத்தை;ஏழ் இசையைக்; காமன் எழில்அழிய எரிஉமிழ்ந்த இமையா நெற்றிக்-கண்ணவனைக்; கற்குடியில் விழுமி யானைக்; கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நற்றவனைப் புற்றரவ நாணி னானை நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னைமுற்றவனை மூவாத மேனி யானை முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற படையானை அடைவார்தம் பாவம் போக்கக்கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
நல்-தவனைப் புற்று அரவ நாணினானை, நாணாது நகுதலை ஊண் நயந்தான் தன்னை,முற்றவனை, மூவாத மேனியானை, முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான் தன்னைப்,பற்றவனைப், பற்றார் தம் பதிகள் செற்ற படையானை, அடைவார் தம் பாவம் போக்கக்கற்றவனைக், கற்குடியில் விழுமியானைக்; கற்பகத்தைக்;- கண் ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச் சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்அங்கையனை அங்கமணி ஆகத் தானை ஆகத்தோர் பாகத்தே அமர வைத்தமங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின் மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
சங்கைதனைத் தவிர்த்துஆண்ட தலைவன் தன்னைச், சங்கரனைத், தழல்உறுதாள் மழுவாள் தாங்கும்அம்கையனை, அங்கம்அணி ஆகத் தானை, ஆகத்துஓர் பாகத்தே அமர வைத்தமங்கையனை, மதியொடுமா சுணமும் தம்மில் மருவவிரி சடைமுடிமேல் வைத்த வான்நீர்க்-கங்கையனைக், கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப் பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணிவிண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும்பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப் பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
பெண்அவனை, ஆண்அவனைப், பேடுஆ னானைப், பிறப்புஇலியை, இறப்புஇலியைப், பேரா வாணிவிண்ணவனை, விண்ணவர்க்கும் மேல்ஆ னானை, வேதியனை, வேதத்தின் கீதம் பாடும்பண்ணவனைப், பண்ணில்வரு பயன்ஆ னானைப், பார்அவனைப், பாரில்வாழ் உயிர்கட்கு எல்லாம்கண்அவனைக், கற்குடியில் விழுமி யானைக்; கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப் பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணாவிண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
பண்டானைப், பரந்தானைக், குவிந்தான் தன்னைப், பாரானை, விண்ஆய்இவ் உலகம் எல்லாம்உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை, ஒருவரும்தன் பெருமைதனை அறிய ஒண்ணாவிண்டானை, விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்அழலில் வெந்துபொடி ஆகி வீழக்கண்டானைக், கற்குடியில் விழுமி யானைக்; கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வானவனை வானவர்க்கு மேலா னானை வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்கதேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச் செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக் குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்லகானவனைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
வானவனை, வானவர்க்கும், மேல்ஆ னானை வணங்கும்அடி யார்மனத்துள் மருவிப் புக்கதேன்-அவனைத், தேவர்தொழு கழலான் தன்னைச், செய்குணங்கள் பலஆகி நின்ற வென்றிக்கோன்அவனைக், கொல்லைவிடை ஏற்றி னானைக், குழல்முழவம் இயம்பக்கூத்து ஆட வல்லகானவனைக், கற்குடியில் விழுமி யானைக்; கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக் கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்தசிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத் திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்ததலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத் தையலோர் பங்கினனைத் தன்கை யேந்துகலையானைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
கொலையானை உரிபோர்த்த கொள்கையானைக் கோளரியைக் கூரம்பா வரை மேல் கோத்தசிலையானைச் செம்மை தரு பொருளான் தன்னைத் திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்ததலையானைத் தத்துவங்கள் ஆனான் தன்னைத் தையலோர் பங்கினனைத் தன் கை ஏந்துகலையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

10

பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப் புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானைஎழிலானை இடைமருதி னிடங்கொண் டானை ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னைஅழலாடு மேனியனை அன்று சென்றக் குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்கழலானைக் கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
பொழிலானைப், பொழில்ஆரும் புன்கூ ரானைப், புறம்பயனை, அறம்புரிந்த புகலூ ரானை,எழிலானை, இடைமருதின் இடம்கொண் டானை, ஈங்கோய்நீங் காதுஉறையும் இறைவன் தன்னை,அழல்ஆடு மேனியனை, அன்று சென்றுஅக் குன்றுஎடுத்த அரக்கன்தோள் நெரிய ஊன்றும்கழலானைக், கற்குடியில் விழுமி யானைக் கற்பகத்தைக்;- கண்ஆரக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.