1
தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந் தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும் வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
தொண்டுஇலங்கும் அடியவர்க்குஓர் நெறியி னாரும், தூநீறு துதைந்துஇலங்கும் மார்பி னாரும்,புண்டரிகத்து அயனொடுமால் காணா வண்ணம் பொங்குதழல் பிழம்புஆய புராண னாரும்,வண்டுஅமரும் மலர்க்கொன்றை மாலை யாரும், வானவர்க்கா நஞ்சுஉண்ட மைந்த னாரும்,விண்டவர்தம் புரம்மூன்றும் எரிசெய் தாரும்- வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.