1
பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றிசூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்த மணிந்தாய் போற்றிஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி அடங்கார் புரமெரிய நக்காய் போற்றிகாட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பாட்டுஆன நல்ல தொடையாய், போற்றி! பரிசை அறியாமை நின்றாய், போற்றி!சூட்டுஆன திங்கள் முடியாய், போற்றி! தூமாலை மத்தம் அணிந்தாய், போற்றி!ஆட்டுஆனது அஞ்சும் அமர்ந்தாய், போற்றி! அடங்கார் புரம்எரிய நக்காய், போற்றி!காட்டுஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.