திருமுறை 6 · 6.055 · 11

திருக்கயிலாயம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கயிலாயம் (நொடித்தான்மலை)
நாடு
வடநாடு

1

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றிஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றிகாற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
வேற்றாகி விண்ஆகி நின்றாய், போற்றி! மீளாமே ஆள்என்னைக் கொண்டாய், போற்றி!ஊற்றாகி உள்ளே ஒளித்தாய், போற்றி! ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!ஆற்றாகி அங்கே அமர்ந்தாய், போற்றி! ஆறுஅங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!காற்றாகி எங்கும் கலந்தாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றிவைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றிபொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றிகச்சாக நாக மசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பிச்சாடல் பேயோடு உகந்தாய், போற்றி! பிறவி அறுக்கும் பிரானே, போற்றி!வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய், போற்றி! மருவிஎன் சிந்தை புகுந்தாய், போற்றி!பொய்ச்சார் புரம்மூன்றும் எய்தாய், போற்றி! போகாதுஎன் சிந்தை புகுந்தாய், போற்றி!கச்சுஆக நாகம் அசைத்தாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றிஉருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றிதிருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றிகருவாகி யோடு முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
மருவார் புரம்மூன்றும் எய்தாய், போற்றி! மருவிஎன் சிந்தை புகுந்தாய், போற்றி!உருஆகி என்னைப் படைத்தாய், போற்றி! உள்ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!திருஆகி நின்ற திறமே, போற்றி! தேசம் பரவப் படுவாய், போற்றி!கருஆகி ஓடும் முகிலே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றிஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றிதேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றிகானத்தீ யாட லுகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
வானத்தார் போற்றும் மருந்தே, போற்றி! வந்துஎன்தன் சிந்தை புகுந்தாய், போற்றி!ஊனத்தை நீக்கும் உடலே, போற்றி! ஓங்கி அழல்ஆய் நிமிர்ந்தாய், போற்றி!தேன(த்)தை வார்த்த தெளிவே, போற்றி! தேவர்க்கும் தேவனாய் நின்றாய், போற்றி!கானத்தீ ஆடல் உகந்தாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றிபேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றிநீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றிகாராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
ஊர்ஆகி நின்ற உலகே, போற்றி! ஓங்கி அழல்ஆய் நிமிர்ந்தாய், போற்றி!பேர்ஆகி எங்கும் பரந்தாய், போற்றி! பெயராதுஎன் சிந்தை புகுந்தாய், போற்றி!நீர்ஆவி ஆன நிழலே, போற்றி! நேர்வார் ஒருவரையும் இல்லாய், போற்றி!கார்ஆகி நின்ற முகிலே போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றிபுல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றிபல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றிகல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
சில்உருஆய்ச் சென்று திரண்டாய், போற்றி! தேவர் அறியாத தேவே, போற்றி!புல்உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய், போற்றி! போகாதுஎன் சிந்தை புகுந்தாய், போற்றி!பல்உயிர்ஆய்ப் பார்தோறும் நின்றாய், போற்றி! பற்றி உலகை விடாதாய், போற்றி!கல்உயிர்ஆய் நின்ற கனலே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றிஎண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றிவிண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றிகண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
பண்ணின் இசைஆகி நின்றாய், போற்றி! பாவிப்பார் பாவம் அறுப்பாய், போற்றி!எண்ணும் எழுத்தும்சொல் ஆனாய், போற்றி! என்சிந்தை நீங்கா இறைவா, போற்றி!விண்ணும் நிலனும்தீ ஆனாய், போற்றி! மேலவர்க்கும் மேல்ஆகி நின்றாய், போற்றி!கண்ணின் மணிஆகி நின்றாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றிஉமைபாக மாகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான ஒருவா போற்றிஅமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றிகமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
இமையாது உயிராது இருந்தாய், போற்றி! என்சிந்தை நீங்கா இறைவா, போற்றி!உமைபாகம் ஆகத்து அணைத்தாய், போற்றி! ஊழி ஏழ்ஆன ஒருவா, போற்றி!அமையா அருநஞ்சம் ஆர்ந்தாய், போற்றி! ஆதி புராணனாய் நின்றாய், போற்றி!கமைஆகி நின்ற கனலே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றிதேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றிஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றிகாவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
மூவாய், பிறவாய், இறவாய், போற்றி! முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!தேவாதி தேவர்தொழும் தேவே, போற்றி! சென்றுஏறி எங்கும் பரந்தாய், போற்றி!ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி! அல்லல் நலிய அலந்தேன், போற்றி!காவாய்! கனகத் திரளே, போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றிஅடியும் முடியும் இகலி போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றிகொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றிகடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
நெடிய விசும்போடு கண்ணே, போற்றி! நீள அகலம் உடையாய், போற்றி!அடியும் முடியும் இகலி, போற்றி! அங்குஒன்று அறியாமை நின்றாய், போற்றி!கொடிய வன்கூற்றம் உதைத்தாய், போற்றி! கோயிலா என்சிந்தை கொண்டாய், போற்றி!கடிய உருமொடு மின்னே, போற்றி!- கயிலை மலையானே போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றிஎண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றிபண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றிகண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
சொற்பிரிப்பு
உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி! ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி!எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி! இறைவிரலால் வைத்துஉகந்த ஈசா, போற்றி!பண்ஆர் இசைஇன்சொல் கேட்டாய், போற்றி! பண்டேஎன் சிந்தை புகுந்தாய், போற்றி!கண்ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி!- கயிலை மலையானே, போற்றி! போற்றி!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.