1
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்கீண்டானைக் கேதாரம் மேவி னானைக் கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்புபூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
சொற்பிரிப்பு
ஆண்டானை, அடியேனை ஆளாக் கொண்டு; அடியோடு முடிஅயன்மால் அறியா வண்ணம்நீண்டானை; நெடுங்களமா நகரான் தன்னை; நேமிவான் படையால்நீள் உரவோன் ஆகம்கீண்டானைக்; கேதாரம் மேவி னானைக்; கேடுஇலியைக்; கிளர்பொறிவாள் அரவோடு என்புபூண்டானைப்; புள்ளிருக்கு வேளூ ரானைப்;- போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.