1
மானேறு கரமுடைய வரதர் போலும் மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்கானேறு கரிகதற வுரித்தார் போலுங் கட்டங்கங் கொடிதுடிகைக் கொண்டார் போலுந்தேனேறு திருஇதழித் தாரார் போலுந் திருவீழி மிழலையமர் செல்வர் போலும்ஆனேற தேறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.
சொற்பிரிப்பு
மான்ஏறு கரம்உடைய வரதர் போலும்; மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்;கான்ஏறு கரிகதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி,துடி,கைக் கொண்டார் போலும்;தேன்ஏறு திருஇதழித் தாரார் போலும்; திருவீழி மிழலைஅமர் செல்வர் போலும்;ஆன்ஏறு அதுஏறும் அழகர் போலும்- அடியேனை ஆள்உடைய அடிகள் தாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.