திருமுறை 6 · 6.051 · 11

திருவீழிமிழலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார்மயிலாடு துறையுளார் மாகா ளத்தார் வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்தஅயில்வாய சூலமுங் காபா லமும் அமருந் திருக்கரத்தார் ஆனே றேறிவெயிலாய சோதி விளங்கு நீற்றார் வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
கயிலாய மலைஉள்ளார்; காரோ ணத்தார்; கந்தமா தனத்துஉளார்; காளத் தி(ய்)யார்;மயிலாடு துறைஉளார்; மாகா ளத்தார்; வக்கரையார்; சக்கரம்மாற்கு ஈந்தார்; வாய்ந்தஅயில்வாய சூலமும், காபா ல(ம்)மும், அமரும் திருக்கரத்தார்; ஆன்ஏறு ஏறி,வெயில்ஆய சோதி விளங்கும் நீற்றார்- வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர் பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்கேதிசர மேவினார் கேதா ரத்தார் கெடில வடவதிகை வீரட் டத்தார்மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார் மழபாடி மேய மழுவா ளனார்வேதி குடியுளார் மீயச் சூரார் வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
பூதிஅணி பொன்நிறத்தர்; பூண நூலர்; பொங்குஅரவர்; சங்கரர்;வெண் குழைஓர் காதர்;கேதிசரம் மேவினார்; கேதா ரத்தார்; கெடில வடஅதிகை வீரட் டத்தார்;மாதுயரம் தீர்த்துஎன்னை உய்யக் கொண்டார்; மழபாடி மேய மணவா ள(ன்)னார்;வேதிகுடி உள்ளார்; மீயச் சூரார்- வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்உண்ணாழி கையார் உமையா ளோடும் இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
அண்ணா மலைஅமர்ந்தார்; ஆரூர் உள்ளார்; அளப்பூரார்; அந்தணர்கள் மாடக் கோயில்உண்ணா ழிகையார், உமையா ளோடும்; இமையோர் பெருமானார்; ஒற்றி யூரார்;பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை- மாடத்தார்; கூடத்தார் பேரா வூரார்-விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்துரிவை போர்த்த விடலை வேடம்விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
வெண்காட்டார்; செங்காட்டங் குடியார்; வெண்ணி நன்நகரார்; வேட்களத்தார்; வேத நாவார்;பண்காட்டும் வண்டுஆர் பழனத்து உள்ளார்; பராய்த்துறையார்; சிராப்பள்ளி உள்ளார் - பண்டுஓர்வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்து,உரிவை போர்த்த விடலை வேடம்விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி, வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற் றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார் கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச்சிற் றம்பலத்தே நடம்ஆ டு(வ்)வார்;உடைசூழ்ந்த புலித்தோலர்; கலிக்கச் சி(ம்)மேற் றளிஉளார்; குளிர்சோலை ஏகம் பத்தார்;கடைசூழ்ந்து பலிதேரும் கங்கா ள(ன்)னார்; கழுமலத்தார்; செழுமலர்த்தார்க் குழலி யோடும்விடைசூழ்ந்த வெல்கொடியார் - மல்கு செல்வ வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார் பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார் கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
பெரும்புலியூர் விரும்பினார்; பெரும்பா ழி(ய்)யார்; பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்;இரும்புதலார் இரும்பூளை உள்ளார்; ஏர்ஆர் இன்னம்ப ரார்;ஈங்கோய் மலையார்; இன்சொல்கரும்புஅனையாள் உமையோடும் கருகா வூரார்; கருப்பறிய லூரார்; கரவீ ரத்தார்-விரும்புஅமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார் கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார் வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
மறைக்காட்டார்; வலிவலத்தார்; வாய்மூர் மேயார்; வாழ்கொளி புத்தூரார்; மாகா ளத்தார்;கறை(க்)காட்டும் கண்டனார்; காபா லி(ய்)யார்; கற்குடியார்; விற்குடியார்; கானப் பேரார்;பறை(க்)காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப் பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டுஓர்மிறை(க்)காட்டும் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்- வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார் சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர் நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார் வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
அஞ்சைக் களத்துஉள்ளார்; ஐயாற்று உள்ளார்; ஆரூரார்; பேரூரார்; அழுந்தூர் உள்ளார்;தஞ்சைத் தளிக்குளத்தார்; தக்க ளூரார்; சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்;நஞ்சைத் தமக்குஅமுதா உண்ட நம்பர்; நாகேச் சுரத்துஉள்ளார்; நாரை யூரார்;வெஞ்சொல் சமண்சிறையில் என்னை மீட்டார்- வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார் கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார் தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
கொண்டல்உள்ளார்; கொண்டீச் சுரத்தின் உள்ளார்; கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார்;தண்டலையார்; தலையாலங் காட்டில் உள்ளார்; தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்;வண்டலொடு மணல்கொணரும் பொன்னி நன்நீர் வலஞ்சுழியார்; வைகலில்மேல் மாடத்து உள்ளார்;வெண்தலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்- வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார் அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார் பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகிஎரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக் கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர் வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
அரிச்சந்தி ரத்துஉள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்;புரிச்சந்தி ரத்துஉள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்புஅரையன் மகளோடு விருப்பர் ஆகிஎரிச்சந்தி வேட்கும் இடத்தார்; ஏம- கூடத்தார் பாடத்தேன் இசைஆர் கீதர்;விரிச்சுஅங்கை எரிக்கொண்டுஅங்கு ஆடும் வேடர்- வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்கதன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப் பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர் வீழி மிழலையே மேவி னாரே.
சொற்பிரிப்பு
புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்; புலிவலத்தார்; வலியின் மிக்கதன்கூர்மை கருதிவரை எடுக்கல் உற்றான் தலைகளொடு மலைகள்அன தாளும் தோளும்பொன்கூரும் கழல்அடிஓர் விரலால் ஊன்றிப், பொருப்புஅதன்கீழ் நெரித்து,அருள்செய் புவன நாதர்;மின்கூரும் சடைமுடியார்; விடையின் பாகர்- வீழி மிழலையே மேவி னாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.