1
போரானை ஈருரிவைப் போர்வை யானைப் புலியதளே யுடையாடை போற்றி னானைப்பாரானை மதியானைப் பகலா னானைப் பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்றநீரானைக் காற்றானைத் தீயா னானை நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத்தேரானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
சொற்பிரிப்பு
போர்ஆனை ஈர்உரிவைப் போர்வை யானைப், புலிஅதளே உடைஆடை போற்றி னானைப்,பாரானை, மதியானைப், பகல்ஆ னானைப், பல்உயிர்ஆய் நெடுவெளிஆய்ப் பரந்து நின்றநீரானைக், காற்றானைத், தீஆ னானை, நினையாதார் புரம்எரிய நினைந்த தெய்வத்-தேரானைத், திருவீழி மிழலை யானைச்,- சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.