திருமுறை 6 · 6.049 · 10

திருக்கோகரணம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கோகரணம்
நாடு
துளுவ நாடு

1

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண் அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண் பலபலவும் பாணி பயில்கின் றான்காண்மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
சந்திரனும் தண்புனலும் சந்தித் தான்காண்; தாழ்சடையான்காண்; சார்ந்தார்க்கு அமுதுஆ னான்காண்;அந்தரத்தில் அசுரர்புரம் மூன்றுஅட் டான்காண்; அவ்உருவில் அவ்உருவம் ஆயி னான்காண்;பந்தரத்து நால்மறைகள் பாடி னான்காண்; பலபலவும் பாணி பயில்கின் றான்காண்;மந்திரத்து மறைப்பொருளும் ஆயி னான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தந்தவத்தன் தந்தலையைத் தாங்கி னான்காண் சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண் கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண் வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
தந்த(அ)த்தன் தன்தலையைத் தாங்கி னான்காண்; சாரணன்காண்; சார்ந்தார்க்குஇன் அமுதுஆ னான்காண்;கெந்தத்தன் காண்;கெடில வீரட் டன்காண்; கேடுஇலிகாண்; கெடுப்பார்மற்று இல்லா தான்காண்;வெந்துஒத்த நீறுமெய் பூசி னான்காண்; வீரன்காண்; வியன்கயிலை மேவி னான்காண்;வந்துஒத்த நெடுமாற்கும் அறிவுஓ ணான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண் தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ளபொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண் புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண் வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண்மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
தன்உருவம் யாவருக்கும் தாக்கா தான்காண்; தாழ்சடைஎம் பெருமான்காண்; தக்கார்க்கு உள்ளபொன்உருவச் சோதி;புனல் ஆடி னான்காண்; புராணன்காண்; பூதங்கள் ஆயி னான்காண்;மின்உருவ நுண்இடையாள் பாகத் தான்காண்; வேழத்தின் உரிவெருவப் போர்த்தான் தான்காண்;மன்உருஆய் மாமறைகள் ஓதி னான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண் அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண்நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண் நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண் கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
ஆறுஏறு செஞ்சடைஎம் ஆரூ ரன்காண்; அன்பன்காண்; அணிபழனம் மேயான் தான்காண்;நீறுஏறி நிழல்திகழும் மேனி யான்காண்; நிருபன்காண்; நிகர்ஒன்றும் இல்லா தான்காண்;கூறுஏறு கொடுமழுவாள் படையி னான்காண்; கொக்கரையன் காண்;குழுநல் பூதத் தான்காண்;மாறுஆய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண் தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும்பொன்றப் பொடியாக நோக்கி னான்காண் பூதன்காண் பூதப் படையாளிகாண்அன்றப் பொழுதே அருள்செய் தான்காண் அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண்மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
சென்றுஅச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்; தீயம்பன் காண்;திரி புரங்கள் மூன்றும்பொன்றப் பொடிஆக நோக்கி னான்காண்; பூதன்காண்; பூதப்படை யாளீ காண்;அன்றுஅப் பொழுதே அருள்செய் தான்காண்; அனல்ஆடி காண்;அடியார்க்கு அமுதுஆ னான்காண்;மன்றல் - மணம்கமழும் வார்சடை யான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண்கையிற் கபால மேந்திப்பறையோடு பல்கீதம் பாடி னான்காண் ஆடினான் காண்பாணி யாக நின்றுமறையோடு மாகீதங் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
பிறையோடு பெண்ஒருபால் வைத்தான் தான்காண்; பேரவன்காண்; பிறப்புஒன்றும் இல்லா தான்காண்;கறையோடு மணிமிடற்றுக் காபா லீகாண்; கட்டங்கன் காண்,கையில் கபாலம் ஏந்திப்பறையோடு பல்கீதம் பாடி னான்காண்; ஆடினான் காண்,பாணி ஆக நின்று;மறையோடு மாகீதம் கேட்டான் தான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண் விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண் மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண் ஏவலன்காண் இமையோர்க ளேத்த நின்றுமண்ணளந்த மாலறியா மாயத் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
மின்அளந்த மேல்முகட்டின் மேல்உற் றான்காண்; விண்ணவர்தம் பெருமான்காண்; மேவில் எங்கும்முன்அளந்த மூவர்க்கும் முதல்ஆ னான்காண்; மூஇலைவேல் சூலத்துஎம் கோலத் தான்காண்;எண்அளந்துஎன் சிந்தையே மேவி னான்காண்; ஏவலன்காண்; இமையோர்கள் ஏத்த நின்று,மண்அளந்த மால்அறியா மாயத் தான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண் பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்முன்னி யுலகுக்கு முன்னா னான்காண் மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
பின்னுசடை மேல்பிறை சூடி னான்காண்; பேர்அருளன் காண்;பிறப்புஒன்று இல்லா தான்காண்;முன்னி உலகுக்கு முன்ஆ னான்காண்; மூஎயிலும் செற்றுஉகந்த முதல்வன் தான்காண்;இன்னஉரு என்றுஅறிவுஒண் ணாதான் தான்காண்; ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயி னான்காண்;மன்னும் மடந்தைஓர் பாகத் தான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண் வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண் பூதன்காண் பூதப் படையி னான்காண்கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண் கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
வெட்ட வெடித்தார்க்குஓர் வெவ்அழ லன்காண்; வீரன்காண்; வீரட்டம் மேவி னான்காண்;பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண்; பூதன்காண்; பூதப் படையி னான்காண்;கட்டக் கடுவினைகள் காத்துஆள் வான்காண்; கண்டன்காண்; வண்டுஉண்ட கொன்றை யான்காண்;வட்ட மதிப்பாகம் சூடி னான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக் கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண்மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண்பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண் போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
சொற்பிரிப்பு
கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால்விரலால் - தோள்நெரிய ஊன்றி னான்காண்;மெய்யின் நரம்புஇசையால் கேட்பித் தாற்கு மீண்டே அவற்குஅருள்கள் நல்கி னான்காண்;பொய்யர் மனத்துப் புறம்புஆ வான்காண்; போர்ப்படையான் காண்;பொருவார் இல்லா தான்காண்;மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்- மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.