திருமுறை 6 · 6.048 · 10

திருவலிவலம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
வலிவலம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்தவில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண் மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈயவல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
நல்லான்காண், நால்மறைகள் ஆயி னான்காண், நம்பன்காண், நணுகாதார் புரம்மூன்று எய்தவில்லான்காண், விண்ணவர்க்கும் மேல்ஆ னான்காண், மெல்லியலாள் பாகன்காண், வேத வேள்விச்சொல்லான்காண், சுடர்மூன்றும் ஆயி னான்காண், தொண்டுஆகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈயவல்லான்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஊனவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண் உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந்தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண் தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்டகானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண் களியானை யீருரிவை கதறப் போர்த்தவானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
ஊனவன்காண், உடல்தனக்குஓர் உயிர்ஆ னான்காண், உள்ளவன்காண், இல்லவன்காண், உமையாட்கு என்றும்தேன்அவன்காண், திருஅவன்காண், திசைஆ னான்காண், தீர்த்தன்காண், பார்த்தன்தன் பணியைக் கண்டகானவன்காண், கடல்அவன்காண், மலைஆ னான்காண், களியானை ஈர்உரிவை கதறப் போர்த்தவானவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண் இன்பன்காண் துன்பங்க ளில்லா தான்காண்தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் உத்தமன்காண் தானேயெங்கும்ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் அகங்குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
ஏயவன்காண்; எல்லார்க்கும் இயல்புஆ னான்காண்; இன்பன்காண்; துன்பங்கள் இல்லா தான்காண்;தாய்அவன்காண், உலகுக்குஓர்; தன்ஒப்பு இல்லாத் தத்துவன்காண்; உத்தமன்காண்; தானே எங்கும்ஆயவன்காண்; அண்டத்துக்கு அப்பா லான்காண்; அகம்குழைந்து, மெய்அரும்பி, அழுவார் தங்கள்வாயவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரானான்காண் ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம்வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண் விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும்பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண் புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னிவைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
உய்த்தவன்காண்; உடல்தனக்குஓர் உயிர்ஆ னான்காண்; ஓங்காரத்து ஒருவன்காண்; உலகுக்கு எல்லாம்வித்துஅவன்காண்; விண்பொழியும் மழைஆ னான்காண்; விளைவுஅவன்காண்; விரும்பாதார் நெஞ்சத்து என்றும்பொய்த்தவன்காண்; பொழில்ஏழும் தாங்கி னான்காண்; புனலோடு, வளர்மதியும், பாம்பும், சென்னிவைத்தவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண் குற்றங்க ளனைத்துங்காண் கோல மாயநீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண் நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கைஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண் இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழமாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
கூற்றுஅவன்காண், குணம்அவன்காண், குறிஆ னான்காண், குற்றங்கள் அனைத்தும்காண், கோலம் ஆயநீற்றவன்காண், நிழல்அவன்காண், நெருப்புஆ னான்காண், நிமிர்புன் சடைமுடிமேல் நீர்ஆர் கங்கைஏற்றவன்காண், ஏழ்உலகும் ஆயி னான்காண், இமைப்புஅளவில் காமனைமுன் பொடிஆய் வீழமாற்றவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நிலையவன்காண் தோற்றவன் காணிறையானான்காண் நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்தசிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை ஒருபாகஞ் சேர்த்தி னான்காண்கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக் கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வமலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
நிலைஅவன்காண்; தோற்றுஅவன்காண்; நிறைஆ னான்காண்; நீர்அவன்காண்; பார்அவன்காண், ஊர்மூன்று எய்தசிலையவன்காண்; செய்யவாய்க், கரிய கூந்தல், தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தி னான்காண்;கலையவன்காண்; காற்றுஅவன்காண்; காலன் வீழக் கறுத்தவன்காண்; கயிலாயம் என்னும் தெய்வ-மலையவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும் பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண்எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங்கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங் கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்தமண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
பெண்அவன்காண், ஆண்அவன்காண், பெரியோர்க்கு என்றும் பெரியவன்காண், அரிஅவன்காண், அயன்ஆ னான்காண்,எண்அவன்காண், எழுத்துஅவன்காண், இன்பக் கேள்வி இசைஅவன்காண், இயல்அவன்காண், எல்லாம் காணும்கண்அவன்காண், கருத்துஅவன்காண், கழிந்தோர் செல்லும் கதிஅவன்காண், மதிஅவன்காண், கடல்ஏழ் சூழ்ந்தமண்அவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி முதலவன்காண் முடியவன்காண் மூன்று சோதிஅன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும் அணியவன்காண் சேயவன்காண் அளவில்சோதிமின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம் வேண்டினன் காணீண்டு புனற்கங்கைக் கென்றும்மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
முன்னவன்காண், பின்னவன்காண், மூவா மேனி முதல்அவன்காண், முடிவுஅவன்காண், மூன்று சோதிஅன்னவன்காண், அடியார்க்கும் அண்டத் தார்க்கும் அணியவன்காண், சேயவன்காண், அளவுஇல் சோதிமின்அவன்காண், உரும்அவன்காண், திருமால் பாகம் வேண்டினன்காண், ஈண்டுபுனல் கங்கைக்கு என்றும்மன்னவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங்கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண் காலங்கள் ஊழியாக் கலந்து நின்றபதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண்பாம்போடு திங்கள் பயில வைத்தமதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
நெதிஅவன்காண், யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன்காண், வேதியன்காண், நினைவார்க்கு என்றும்கதிஅவன்காண், கார்அவன்காண், கனல்ஆ னான்காண், காலங்கள் ஊழியாக் கலந்து நின்றபதிஅவன்காண், பழம்அவன்காண், இரதம் தான்காண், பாம்போடு திங்கள் பயில வைத்தமதியவன்காண் - வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பங்கயத்தின் மேலானும் பால னாகி உலகளந்த படியானும் பரவிக் காணாதங்கைவைத்த சென்னியரா யளக்க மாட்டா அனலவன்காண் அலைகடல்சூழிலங்கை வேந்தன்கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங் குழகன்காண் அழகன்காண் கோல மாயமங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.
சொற்பிரிப்பு
பங்கயத்தின் மேலானும், பாலன் ஆகி உலகுஅளந்த படியானும், பரவிக் காணாதுஅங்கைவைத்த சென்னியராய், அளக்க மாட்டா அனல்அவன்காண், அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்கொங்குஅலர்த்த முடிநெரிய விரலால் ஊன்றும் குழகன்காண்; அழகன்காண்; கோலம் ஆயமங்கையர்க்குஓர் கூறன்காண் - வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண்;அவன்என் மனத்துஉ ளானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.