திருமுறை 6 · 6.047 · 10

திருவாவடுதுறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆவடுதுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்கஉருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்றகருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் காவாய்அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
திருவே,என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே, செழுஞ்சுடர்நல் சோதி மிக்கஉருவே,என் உறவே,என் ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்றகருவே,என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே, மணிஆடு பாவாய்,- காவாய்,அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்!- ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின் மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்மேற்றான்நீ செய்வனகள் செய்யக் கண்டு வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளும்ஆற்றேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
மாற்றேன், எழுத்துஅஞ்சும் என்தன் நாவின்; மறவேன், திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின்ஏற்றேன்; பிறதெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்;மேல்-தான்நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே இடம்கொடுத்து, நாளும் நாளும்ஆற்றேன், அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்- ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார்சடையாய் நின்றன் நாமம்உரையா உயிர்போகப் பெறுவே னாகில் உறுநோய்வந் தெத்தனையு முற்றா லென்னேகரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின்கழலே யேத்து மன்பர்க்கரையா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
வரைஆர் மடமங்கை பங்கா! கங்கை மணவாளா! வார்சடையாய்! நின்தன் நாமம்உரையா, உயிர்போகப் பெறுவேன் ஆகில், உறுநோய்வந்து எத்தனையும் உற்றால் என்னே?கரையா, நினைந்து,உருகிக் கண்ணீர் மல்கிக், காதலித்து, நின்கழலே ஏத்தும் அன்பர்க்குஅரையா! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்- ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலைவளைவித் துமையவளை யஞ்ச நோக்கிச்கலித்தாங் கிரும்பிடிமேற் கைவைத் தோடுங் களிறுரித்த கங்காளா எங்கள் கோவேநிலத்தார் அவர்தமக்கே பொறையாய் நாளும் நில்லா வுயிரோம்பு நீத னேநான்அலுத்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலைவளைவித்து உமையவளை அஞ்ச நோக்கிச்கலித்துஆங்கு இரும்பிடிமேல் கைவைத்து ஓடும் களிறுஉரித்த கங்காளா! எங்கள் கோவே!நிலத்தார் அவர்தமக்கே பொறைஆய், நாளும், நில்லா உயிர்ஓம்பும் நீத னேன்நான்அலுத்தேன்; அடியேனை “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின்கழலே யேத்தி வாழ்த்தித்துறவாத துன்பந் துறந்தேன் தன்னைத் சூழுலகில் ஊழ்வினைவந் துற்றா லென்னெஉறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண் டுய்யக் கொண்டஅறவா அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
நறுமா மலர்கொய்து, நீரின் மூழ்க, நாள்தோறும் நின்கழலே ஏத்தி, வாழ்த்தித்,துறவாத துன்பம் துறந்தேன் தன்னைத் சூழ்உலகில் ஊழ்வினைவந்து உற்றால் என்னே?உறவுஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுஉண்டு, உய்யக் கொண்டஅறவா! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கோன்நா ரணன் அங்கத் தோள்மேற் கொண்டு கொழுமலரான் தன்சிரத்தைக் கையி லேந்திக்கானார் களிற்றுரிவைப் போர்வை மூடிக் கங்காள வேடராய் எங்குஞ் செல்வீர்நானார் உமக்கோர் வினைக்கே டனேன் நல்வினையுந் தீவினையு மெல்லாம் முன்னேஆனாய் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
கோன்நா ரணன்அங்கம் தோள்மேல் கொண்டு, கொழுமலரான் தன்சிரத்தைக் கையில் ஏந்திக்,கான்ஆர் களிற்றுஉரிவைப் போர்வை மூடிக், கங்காள வேடராய் எங்கும் செல்வீர்;நான்ஆர், உமக்கு,ஓர் வினைக்கே ட(ன்)னேன்? நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னேஆனாய்! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உழையுரித்த மானுரிதோ லாடை யானே உமையவள்தம் பெருமானே இமையோர் ஏறேகழையிறுத்த கருங்கடல்நஞ் சுண்ட கண்டா கயிலாய மலையானே உன்பா லன்பர்பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே பேரருளுன் பால தன்றேஅழையுறுத்து மாமயில்க ளாலுஞ் சோலை ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
உழைஉரித்த மான்உரி-தோல் ஆடை யானே! உமையவள்தம் பெருமானே! இமையோர் ஏறே!கழைஇறுத்த, கருங்கடல்நஞ்சு உண்ட கண்டா! கயிலாய மலையானே! “உன்பால் அன்பர்பிழைபொறுத்தி!” என்பதுவும், பெரியோய்! நின்தன் கடன்அன்றே? பேர்அருள்உன் பாலது அன்றே?-அழைஉறுத்து மாமயில்கள் ஆலும் சோலை ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உலந்தார் தலைகலனொன் றேந்தி வானோ ருலகம் பலிதிரிவாய் உன்பா லன்புகலந்தார் மனங்கவருங் காத லானே கனலாடுங் கையவனே ஐயா மெய்யேமலந்தாங் குயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்தழுந்தி நாளும் நாளும்அலந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
உலந்தார் தலைகலன்ஒன்று ஏந்தி, வானோர் உலகம் பலிதிரிவாய்! உன்பால் அன்புகலந்தார் மனம்கவரும் காத லானே! கனல்ஆடும் கையவனே! ஐயா! மெய்யேமலம்தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்து,அழுந்தி நாளும் நாளும்அலந்தேன், அடியேனை “அஞ்சேல்” என்னாய் ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பல்லார்ந்த வெண்டலை கையி லேந்திப் பசுவேறி யூரூரன் பலிகொள் வானேகல்லார்ந்த மலைமகளும் நீயு மெல்லாங் கரிகாட்டி லாட்டுகந்தீர் கருதீ ராகில்எல்லாரு மெந்தன்னை யிகழ்வர் போலும் ஏழையமண் குண்டர்சாக் கியர்களொன்றுக்கல்லாதார் திறத்தொழிந்தேன் அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
பல்ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்திப், பசுஏறி, ஊர்ஊரன் பலிகொள் வானே!கல்ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டுஉகந்தீர்; கருதீர் ஆகில்,எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும்; ஏழைஅமண் குண்டர்,சாக் கியர்கள்,- ஒன்றுக்குஅல்லாதார் - திறத்துஒழிந்தேன்; “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துறந்தார்தந் தூநெறிக்கண் சென்றே னல்லேன் துணைமாலை சூட்டநான் தூயே னல்லேன்பிறந்தேன்நின் திருவருளே பேசி னல்லாற் பேசாத நாளெல்லாம் பிறவா நாளேசெறிந்தார் மதிலிலங்கைக் கோமான் தன்னைச் செறுவரைக்கீ ழடர்த்தருளிச் செய்கை யெல்லாம்அறிந்தேன் அடியேனை அஞ்சே லென்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
சொற்பிரிப்பு
துறந்தார்தம் தூநெறிக்கண் சென்றேன் அல்லேன்; துணைமாலை சூட்டநான் தூயேன் அல்லேன்;பிறந்தேன்நின் திருஅருளே பேசின் அல்லால் பேசாத நாள்எல்லாம் பிறவா நாளேசெறிந்துஆர் மதில்இலங்கைக் கோமான் தன்னைச் செறுவரைக்கீழ் அடர்த்து,அருளிச் செய்கை எல்லாம்அறிந்தேன் அடியேனை “அஞ்சேல்” என்னாய் ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.