திருமுறை 6 · 6.046 · 11

திருவாவடுதுறை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆவடுதுறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரைஅம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
நம்பனை, நால்வேதம் கரைகண் டானை, ஞானப் பெருங்கடலை, நன்மை தன்னைக்,கம்பனைக், கல்லால் இருந்தான் தன்னைக், கற்பகம்ஆய் அடியார்கட்கு அருள்செய் வானைச்,செம்பொன்னைப், பவளத்தைத், திரளும் முத்தைத், திங்களை, ஞாயிற்றைத், தீயை, நீரை,அம்பொன்னை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகிஎன்னானை யெந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானேஅன்னானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
மின்னானை, மின்இடைச்சேர் உருமி னானை, வெண்முகில்ஆய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்,தன்னானைத், தன்ஒப்பார் இல்லா தானைத், தாய்ஆகிப் பல்உயிர்க்குஓர் தந்தை ஆகிஎன்னானை, எந்தை பெருமான் தன்னை, இருநிலமும் அண்டமும்ஆய்ச் செக்கர் வானேஅன்னானை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகிவித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப் பவளக் கொழுந்தினை, மாணிக் கத்தின்தொத்தினைத், தூநெறிஆய் நின்றான் தன்னைச், சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகிவித்தினை, முளைக்கிளையை, வேரைச், சீரை, வினைவயத்தின் தன்சார்பை, வெய்ய தீர்க்கும்அத்தனை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங் கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்தோணியைத் தொண்டனேன் தூய சோதிச் சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
பேணியநல் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பித்தர்ஆம் அடியார்க்கு முத்தி காட்டும்ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டுஇங்கு இளைக்கின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்தோணியைத், தொண்டனேன் தூய சோதிச் சுலாவெண் குழையானைச், சுடர்பொன் காசின்ஆணியை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை உதயத்தி னுச்சியை உருமா னானைப்பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப் பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித் தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதிஅருமணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
ஒருமணியை, உலகுக்குஓர் உறுதி தன்னை, உதயத்தின் உச்சியை, உரும்ஆ னானைப்,பருமணியைப், பாலோடுஅஞ்சு ஆடி னானைப், பவித்திரனைப், பசுபதியைப், பவளக் குன்றைத்,திருமணியைத், தித்திப்பைத், தேன்அது ஆகித், தீம்கரும்பின் இன்சுவையைத், திகழும் சோதிஅருமணியை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை யெல்லி நடமாட வல்லான் தன்னைக்கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக் குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னைநீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை நீண்ட சடை முடிமேல் நீரார் கங்கைஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம்ஆட வல்லான் தன்னைக்,கூற்றானைக், கூற்றம் உதைத்தான் தன்னைக், குரைகடல்வாய் நஞ்சுஉண்ட கண்டன் தன்னை,நீற்றானை, நீள்அரவுஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட சடைமுடிமேல் நீர்ஆர் கங்கை-ஆற்றானை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக் கடல்வரைவா னாகாச மானான் தன்னைச்செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயா னானைஎம்மானை என்மனமே கோயி லாக இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக், கடல்வரைவான் ஆகாசம் ஆனான் தன்னைச்,செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத், திங்களை ஞாயிற்றைத் தீஆ னானை,எம்மானை, என்மனமே கோயில் ஆக இருந்தானை, என்புஉருகும் அடியார் தங்கள்அம்மானை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை வெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த கண்ணானைக் கண்மூன் றுடையான் தன்னைப்பையா டரவமதி யுடனே வைத்த சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னைஐயானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
மெய்யானைப், பொய்யரொடு விரவா தானை, வெள்ளடையைத், தண்நிழலை, வெந்தீ ஏந்தும்கையானைக், காமன்உடல் வேவக் காய்ந்த கண்ணானைக், கண்மூன்று உடையான் தன்னைப்,பைஆடு அரவம்மதி உடனே வைத்த சடையானைப், பாய்புலித்தோல் உடையான் தன்னை,ஐயானை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச் சூலப் படையானைக் காலன் வாழ்நாள்மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனைமுன் அசைவித்த வேடன் தன்னைத்,தூண்டாமைச் சுடர்விடுநல் சோதி தன்னைச், சூலப் படையானைக், காலன் வாழ்நாள்மாண்டுஓட உதைசெய்த மைந்தன் தன்னை, மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்ஆண்டானை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப் பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக் கோலமா நீல மிடற்றான் தன்னைச்செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத் திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்டஅந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
பந்துஅணவு மெல்விரலாள் பாகன் தன்னைப், பாடலோடு ஆடல் பயின்றான் தன்னைக்,கொந்துஅணவு நறுங்கொன்றை மாலை யானைக், கோலமா நீல மிடற்றான் தன்னைச்,செந்தமிழோடு ஆரியனைச், சீரி யானைத், திருமார்பில் புரிவெண்நூல் திகழப் பூண்டஅந்தணனை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத் தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னைநெரித்தானை நேரிழையாள் பாகத் தானை நீசனேன் உடலுறு நோயான தீரஅரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
சொற்பிரிப்பு
தரித்தானைத்,- தண்கடல்நஞ்சு,- உண்டான் தன்னைத்; தக்கன்தன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்;பிரித்தானைப்; பிறைதவழ்செஞ் சடையி னானைப்; பெருவலியால் மலைஎடுத்த அரக்கன் தன்னைநெரித்தானை; நேரிழையாள் பாகத் தானை; நீசனேன் உடல்உறுநோய் ஆன தீரஅரித்தானை,- ஆவடுதண் துறையுள் மேய அரன்அடியே அடிநாயேன் அடைந்துஉய்ந் தேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.