1
வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும் மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடிச் சிவலோகனார்உண்டார்னஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி ஒற்றியூர் மேய வொளிவண்ணனார்கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன் கடும்பிணியுஞ் சுடுஞ்தொழிலுங் கைவிட்டவே.
சொற்பிரிப்பு
வண்டுஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர்சடைமேல் மதியம் சூடித்,திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசைசேர நடம்ஆடிச்,- சிவலோ க(ன்)னார்-உண்டார்நஞ்சு, உலகுக்குஓர் உறுதி வேண்டி; ஒற்றியூர் மேய ஒளிவண் ண(ன்)னார்;கண்டேன்,நான் கனவுஅகத்தில்; கண்டேற்கு என்தன் கடும்பிணியும் சுடும்தொழிலும் கைவிட் ட(வ்)வே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.