1
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானேஏத்தவனாய் ஏழலகு மாயி னானே இன்பனாய்த் துன்பந் களைகி ன்றானேகாத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
சொற்பிரிப்பு
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே! முறைமையால் எல்லாம் படைக்கின் றானே!ஏத்துஅவனாய் ஏழ்உலகும் ஆயி னானே! இன்பனாய்த் துன்பம் களைகி ன்றானே!காத்தவனாய் எல்லாம்தான் காண்கின் றானே! கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்தீர்த்தவனே! திருச்சோற்றுத் துறைஉ ளானே- திகழ்ஒளியே! சிவனே!உன் அபயம், நானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.