திருமுறை 6 · 6.043 · 10

திருப்பூந்துருத்தி

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பூந்துருத்தி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக் காணா தனவெல்லாங் காட்டி னானைத்சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத் தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டுபொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப் புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை; நினையாஎன் நெஞ்சை நினைவித் தானைக்;கல்லா தனஎல்லாம் கற்பித் தானைக்; காணா தனஎல்லாம் காட்டி னானைத்;சொல்லா தனஎல்லாம் சொல்லி, என்னைத் தொடர்ந்து,இங்கு அடியேனை ஆளாக் கொண்டு,பொல்லாஎன் நோய்தீர்த்த புனிதன் தன்னைப், புண்ணியனைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

குற்றாலங் கோகரணம் மேவி னானைக் கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தாந்தன்னைஉற்றால நஞ்சுண் டொடுக்கி னானை யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப் பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்புற்றா டரவார்த்த புனிதன் தன்னைப் புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
குற்றாலம் கோகரணம் மேவி னானைக்; கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை;உற்றுஆலம் - நஞ்சுஉண்டு ஒடுக்கி னானை; உணராஎன் நெஞ்சை உணர்வித் தானைப்;பற்றுஆலின் கீழ்அங்கு இருந்தான் தன்னைப்; பண்ஆர்ந்த வீணை பயின்றான் தன்னைப்;புற்றுஆடு அரவுஆர்த்த புனிதன் தன்னைப்; புண்ணியனைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னைமனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத்தனக்கென்றும் அடியானை யாளாக் கொண்ட சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப்புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
எனக்குஎன்றும் இனியானை, எம்மான் தன்னை, எழில்ஆரும் ஏகம்பம் மேயான் தன்னை,மனக்குஎன்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில் நில்லானை, நின்றியூர் மேயான் தன்னைத்,தனக்குஎன்றும் அடியேனை ஆளாக் கொண்ட சங்கரனைச், சங்கவார் குழையான் தன்னைப்,புனக்கொன்றைத் தார்அணிந்த புனிதன் தன்னைப், பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானைஅறியா தடியே னகப்பட் டேனை அல்லற்கடல் நின்று மேற வாங்கிநெறிதா னிதுவென்று காட்டி னானை நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்பொறியா டரவார்த்த புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
வெறிஆர் மலர்க்கொன்றை சூடி னானை, வெள்ளானை வந்துஇறைஞ்சும் வெண்காட் டானை,அறியாது அடியேன் அகப்பட் டேனை, அல்லல்கடல் நின்றும் ஏற வாங்கி“நெறிதான் இது”என்று காட்டி னானை, நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்,பொறிஆடு அரவுஆர்த்த புனிதன் தன்னைப், பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை விண்டார் புரமூன்றும் வேவ நோக்கிநக்கானை நான்மறைகள் பாடி னானை நல்லார்கள் பேணிப் பரவ நின்றதக்கானைத் தண்டா மரைமே லண்ணல் தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்புக்கானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
மிக்கானை, வெண்நீறு சண்ணித் தானை, விண்டார் புரம்மூன்றும் வேவ நோக்கிநக்கானை, நால்மறைகள் பாடி னானை, நல்லார்கள் பேணிப் பரவ நின்றதக்கானைத், தண்தா மரைமேல் அண்ணல் தலைகொண்டு மாத்திரைக்கண் உலகம் எல்லாம்புக்கானைப், புண்ணியனைப், புனிதன் தன்னைப், பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்பூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம் புணர்ந்தானைப் பூங்கணையா னுடலம் வேவப்பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானைபோர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
ஆர்த்தானை,- வாசுகியை,- அரைக்குஓர் கச்சா அசைத்தானை; அழகுஆய பொன்ஆர் மேனிப்பூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம் புணர்த்தானைப்; பூங்கணையான் உடலம் வேவப்பார்த்தானைப்; பரிந்தானைப்; பனிநீர்க் கங்கை படர்சடைமேல் பயின்றானைப்; பதைப்ப யானைபோர்த்தானைப்; புண்ணியனைப்; புனிதன் தன்னைப்; பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி யுமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டுசிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத் திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
எரித்தானை, எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்புஅளவில் பொடிஆக; எழில்ஆர் கையால்உரித்தானை, மதகரியை உற்றுப் பற்றி; உமைஅதனைக் கண்டுஅஞ்சி நடுங்கக் கண்டுசிரித்தானைச்; சீர்ஆர்ந்த பூதம் சூழத், திருச்சடைமேல் - திங்களும் பாம்பும் நீரும்புரித்தானைப்; புண்ணியனைப்; புனிதன் தன்னைப்; பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வைத்தானை வானோ ருலக மெல்லாம் வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை விண்ணவர்தம் பெருமானை வினைகள் போகஉய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கேபொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
வைத்தானை,- வானோர் உலகம் எல்லாம்,- வந்துஇறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்வித்தானை; வேண்டிற்றுஒன்று ஈவான் தன்னை; விண்ணவர்தம் பெருமானை; வினைகள் போகஉய்த்தானை; ஒலிகங்கை சடைமேல் - தாங்கி ஒளித்தானை; ஒருபாகத்து உமையோடு ஆங்கேபொய்த்தானைப்; புண்ணியனைப்; புனிதன் தன்னைப்; பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஆண்டானை வானோ ருலக மெல்லாம் அந்நா ளறியாத தக்கன் வேள்விமீண்டாணை விண்ணவர்க ளோடுங் கூடி விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேடநீண்டானை நெருப்புருவ மானான் தன்னை நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்பூண்டானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
ஆண்டானை, வானோர் உலகம் எல்லாம்; அந்நாள் அறியாத தக்கன் வேள்விமீண்டாணை, விண்ணவர்க ளோடும் கூடி; விரைமலர்மேல் நான்முகனும் மாலும் தேடநீண்டானை; நெருப்புஉருவம் ஆனான் தன்னை; நிலைஇலார் மும்மதிலும் வேவ, வில்லைப்பூண்டானைப்; புண்ணியனைப்; புனிதன் தன்னைப்; பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றைஅறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டுபொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
சொற்பிரிப்பு
மறுத்தானை, மலைகோத்துஅங்கு எடுத்தான் தன்னை, மணிமுடியோடு இருபதுதோள் நெரியக் காலால்இறுத்தானை; எழுநரம்பின் இசைகேட் டானை; எண்திசைக்கும் கண்ஆனான் சிரம்மேல் ஒன்றைஅறுத்தானை; அமரர்களுக்கு அமுதுஈந் தானை; யாவர்க்கும் தாங்கஒணா நஞ்சம் உண்டுபொறுத்தானைப்; புண்ணியனைப்; புனிதன் தன்னைப்; பொய்இலியைப்,- பூந்துருத்திக் கண்டேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.