திருமுறை 6 · 6.042 · 10

திருநெய்த்தானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
நெய்த்தானம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக்கூடாம்இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும் இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சேமைத்தான நீள்நயனி பங்கன் வங்கம் வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேயநெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து, வினைக்குக் கூடுஆம்இத்தானத்து இருந்து,இங்ஙன் உய்வான் எண்ணும் இதனைஒழி! இயம்பக்கேள்; ஏழை நெஞ்சே!மைத்துஆன நீள்நயனி பங்கன், வங்கம் வருதிரைநீர் நஞ்சுஉண்ட கண்டன், மேயநெய்த்தான நன்நகர்என்று ஏத்தி நின்று, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்லவேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னைஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த அம்மானை அரிஅயனும் காணா வண்ணம்நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
“ஈண்டா இரும்பிறவித் துறவா ஆக்கை- இதுநீங்கல் ஆம்;விதிஉண்டு” என்று சொல்லவேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள்,நீ; விண்ணவர்தம் பெருமானார், மண்ணில் என்னைஆண்டான்,அன்று அருவரையால் புரம்மூன்று எய்த அம்மானை, அரிஅயனும் காணா வண்ணம்நீண்டான், உறைதுறைநெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பரவிப் பலபலவுந் தேடி யோடிப் பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளாகுரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக் குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீஇரவிக் குலமுதலா வானோர் கூடி யெண்ணிறந்த கோடி யமர ராயம்நிரவிக் கரியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமெ.
சொற்பிரிப்பு
பரவிப் பலபலவும் தேடி, ஓடிப், பாழ்ஆம் குரம்பைஇடைக் கிடந்து, வாளாகுரவி, குடிவாழ்கை வாழ எண்ணிக், குலைகை தவிர்,நெஞ்சே! கூறக் கேள்,நீ;இரவிக் குலம்முதலா வானோர் கூடி எண்இறந்த கோடி அமரர் ஆயம்நிரவிக் க(அ)ரியவன்நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டாஇலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள் இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோரேத்தும்நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
அலைஆர் வினைத்திறம்சேர் ஆக்கை யுள்ளே அகப்பட்டு,உள் ஆசைஎனும் பாசம் தன்னுள்தலைஆய்க், கடைஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து,மிக, நெஞ்சமே, அஞ்ச வேண்டா!இலைஆர் புனக்கொன்றை, எறிநீர்த், திங்கள், இருஞ்சடைமேல் வைத்துஉகந்தான்; இமையோர் ஏத்தும்நிலையான்; உறைநிறைநெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப் பொருளென்று மிகவுன்னி மதியா லிந்தஅனைத்துலகும் ஆளலா மென்று பேசும் ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காகமுனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்கநினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
தினைத்தனைஓர் பொறைஇலா உயிர்போம் கூட்டைப் பொருள்என்று மிகஉன்னி, “மதியால் இந்தஅனைத்துஉலகும் ஆளல்ஆம்” என்று பேசும் ஆங்காரம் தவிர்,நெஞ்சே! அமரர்க்கு ஆகமுனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற, அன்று, முடுகியவெஞ் சிலைவளைத்துச், செந்தீ மூழ்கநினைத்தபெருங் கருணையன்நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென்றெண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சேகுறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயரவரு நட்டம் நின்றநிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
மிறைபடும்இவ் உடல்வாழ்வை மெய்என்று எண்ணி, வினையிலே கிடந்துஅழுந்தி, வியவேல், நெஞ்சே!குறைஉடையார் மனத்துஉளான்; குமரன் தாதை; கூத்துஆடும் குணம்உடையான்; கொலைவேல் கையான்;அறைகழலும் திருவடிமேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயரவரு நட்டம் நின்றநிறைவுஉடையான்; இடம்ஆம்நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டுவாசக் குழல்மடவார் போக மென்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சேதூசக் கரியுரித்தான் தூநீ றாடித் துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லாநீசர்க் கரியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
பேசப் பொருள்அலாப் பிறவி தன்னைப் பெரிதுஎன்றுஉன் சிறுமனத்தால் வேண்டி, ஈண்டுவாசக் குழல்மடவார் போகம் என்னும் வலைப்பட்டு, வீழாதே வருக, நெஞ்சே!தூசக் கரிஉரித்தான்; தூநீறு ஆடித் துதைந்துஇலங்கு நூல்மார்பன்; தொடர கில்லாநீசர்க்கு அரியவன்;நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் டருநோய்க் கிடமாய வுடலின் தன்மைதஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே தாழக் கருதுதியே தன்னைச் சேராவஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
அஞ்சப் புலன்இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு, அருநோய்க்கு இடம்ஆய உடலின் தன்மைதஞ்சம் எனக்கருதித், தாழேல், நெஞ்சே! தாழக் கருதுதியே? தன்னைச் சேராவஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணிகண்டன், “வானவர்தம் பிரான்!”என்று ஏத்தும்நெஞ்சர்க்கு இனியவன்,நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னிஇருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங் கண்ணுதல்கண் டமராடி கருதார் வேள்விநிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
பொருந்தாத உடல்அகத்தின் புக்க ஆவி போம்ஆறு அறிந்துஅறிந்தே, புலைவாழ்வு உன்னி,இருந்துஆங்கு இடர்ப்படநீ வேண்டா; நெஞ்சே! இமையவர்தம் பெருமான்;அன்று உமையாள் அஞ்சக்,கருந்தாள் மதகரியை வெருவச் சீறும் கண்ணுதல்;கண்டு அமர்ஆடிக், கருதார் வேள்வி;நிரந்தரமா இனிதுஉறைநெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனைநெரித்தானை நெய்த்தானம் மேவி னானை நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
சொற்பிரிப்பு
உரித்துஅன்று, உனக்குஇவ் உடலின் தன்மை; உண்மை உரைத்தேன்; விரதம் எல்லாம்தரித்தும் தவம்முயன்றும் வாழா நெஞ்சே! தம்மிடையில் இல்லார்க்குஒன்று அல்லார்க்கு அன்னன்;எரி(த்)தான்; அனல்உடையான்; “எண்தோ ளானே!” எம்பெருமான் என்றுஏத்தா இலங்கைக் கோனைநெரித்தானை, நெய்த்தானம் மேவி னானை, நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.