1
வகையெலா முடையாயும் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும் வெண்காடு மேவினாய் நீயே யென்றும்பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்திகையெலாந் தொழச்செல்வாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
சொற்பிரிப்பு
வகை எலாம் உடையாயும் நீயே என்றும், வான்கயிலை மேவினாய் நீயே என்றும்,மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும், வெண்காடு மேவினாய் நீயே என்றும்,பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும், பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்,திகை எலாம் தொழச்செல்வாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா!-என் நெஞ்சு உளாயே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.