1
அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்சிலையெடுத்து மாநாக நெருப்புக் கோத்துத் திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்நிலையடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரைவயிரப் பலகையாற் குவையார்த் துற்றமலையடுத்த மழபாடி வயிரத் தூணே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
அலைஅடுத்த பெருங்கடல்நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள்தம் தலைகாத்த ஐயர்; செம்பொன்-சிலைஎடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத் திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்;“நிலைஅடுத்த பசும்பொன்னால், முத்தால், நீண்ட நிரைவயிரப் பலகையால், குவையாய்த் துற்றமலைஅடுத்த மழபாடி வயிரத் தூணே!” என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.