1
நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய் கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய் ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்மாறானார் தம்மரண மட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
நீறுஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்;கூறுஆக உமைபாகம் கொண்டான் கண்டாய்; கொடியவிடம் உண்டுஇருண்ட கண்டன் கண்டாய்;ஏறுஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;மாறுஆனார் தம்அரணம் அட்டான் கண்டாய்- மழபாடி மன்னும் மணாளன் தானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.