1
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே யென்றேன் நானேகூரார் மழுவாட் படையொன் றேந்திக் குறட்பூதப் பல்படையா யென்றேன் நானேபேரா யிரமுடையா யென்றேன் நானே பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானேஆரா வமுதேயென் ஐயா றனே என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சொற்பிரிப்பு
“ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல்ஆடி! ஆரமுதே!” என்றேன், நானே;“கூர்ஆர் மழுவாள் படைஒன்று ஏந்திக் குறள்பூதப் பல்படையாய்!” என்றேன், நானே;“பேர்ஆ யிரம்உடையாய்!” என்றேன், நானே; “பிறைசூடும் பிஞ்ஞகனே!” என்றேன், நானே;“ஆரா ஆமுதே!என் ஐயா ற(ன்)னே!”- என்றுஎன்றே நான்அரற்றி நைகின் றேனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.