1
அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமேகொலையாய கூற்ற முதைத்தார் தாமே கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமேசிலையாற் புரமூன் றெரித்தார் தாமே தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமேபலிதேர்ந் தழகாய பண்பர் தாமே பழன நகரெம் பிரானார் தாமே.
சொற்பிரிப்பு
அலைஆர் கடல்நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;கொலைஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல்வேங்கைத் தோல்ஒன்று அசைத்தார் தாமே;சிலையால் புரம்மூன்றும் எரித்தார் தாமே; தீநோய் களைந்துஎன்னை ஆண்டார் தாமே;பலிதேர்ந்து அழகுஆய பண்பர் தாமே- பழன நகர்எம்பி ரானார் தாமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.