1
தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்பூண்டு பொறியரவங் காதிற் பெய்து பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி வெண்காடு மேவிய விகிர்த னாரே.
சொற்பிரிப்பு
தூண்டு சுடர்மேனித் தூநீறு ஆடிச், சூலம்கை ஏந்தி,ஓர் சுழல்வாய் நாகம்பூண்டு, பொறிஅரவம் காதில் பெய்து, பொற்சடைகள் அவைதாழப், புரிவெண் நூலர்,நீண்டு கிடந்துஇலங்கு திங்கள் சூடி, நெடும்தெருவே வந்துஎனது நெஞ்சம் கொண்டார்,வேண்டு நடைநடக்கும் வெள்ஏறு ஏறி;- வெண்காடு மேவிய விகிர்த னாரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.