1
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவ மான நாளோகருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோமருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ மான்மறிக்கை யேந்தியோர் மாதோர் பாகந்திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.
சொற்பிரிப்பு
ஒருவனாய் உலகுஏத்த நின்ற நாளோ? ஓர்உருவே மூஉருவம் ஆன நாளோ?கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ? காமனையும் கண்அழலால் விழித்த நாளோ?மருவனாய் மண்ணும்விண்ணும் தெரித்த நாளோ? மான்மறிக்கை ஏந்தி,ஓர் மாது,ஓர் பாகம்திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ? திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.