திருமுறை 6 · 6.033 · 10

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆரூர் அரநெறி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக் காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றைஇருங்கனக மதிலாரூர் மூலட் டானத் தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
பொருங்கைமதக் கரிஉரிவைப் போர்வை யானைப், பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்,கரும்புதரு கட்டியை,இன் அமிர்தைத், தேனைக், காண்புஅரிய செழுஞ்சுடரைக், கனகக் குன்றை,இருங்கனக மதில்ஆரூர் மூலட் டானத்து, எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும்அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கற்பகமும் இருசுடரு மாயி னானைக் காளத்தி கயிலாய மலையு ளானைவிற்பயிலும் மதனழிய விழித்தான் றன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான் றன்னைப்பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம் பொருந்தியவெம் பெருமானைப் பொருந்தார் சிந்தைஅற்புதனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
கற்பகமும் இருசுடரும் ஆயி னானைக், காளத்தி கயிலாய மலைஉ ளானை,வில்பயிலும் மதன்அழிய விழித்தான் தன்னை, விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்,பொற்புஅமரும் பொழில்ஆரூர் மூலட் டானம் பொருந்திய எம்பெருமானைப், பொருந்தார் சிந்தைஅற்புதனை, அரநெறியில் அப்பன் தன்னை,- அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப் பாசூரும் பரங்குன்றும் மேயான் றன்னைவேதியனைத் தன்னடியார்க் கெளியான் றன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்போதியலும் பொழிலாரூர் மூலட் டானம் புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்ஆதியனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
பாதிஒரு பெண்,முடிமேல் கங்கை யானைப், பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை,வேதியனைத், தன்அடியார்க்கு எளியான் தன்னை, மெய்ஞ்ஞான விளக்கானை, விரையே நாறும்போதுஇயலும் பொழில்ஆரூர் மூலட் டானம் புற்றுஇடம்கொண்டு இருந்தானைப், போற்று வார்கள்ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை,- அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நந்திபணி கொண்டருளும் நம்பன் றன்னை நாகேச் சரமிடமா நண்ணி னானைச்சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந் தத்துவனைச் சக்கரமாற் கீந்தான் றன்னைஇந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம் இடங்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்அந்தணனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
நந்திபணி கொண்டுஅருளும் நம்பன் தன்னை, நாகேச்சு ரம்இடமா நண்ணி னானைச்,சந்திமலர் இட்டுஅணிந்து வானோர் ஏத்தும் தத்துவனைச், சக்கரம்மாற்கு ஈந்தான் தன்னை,இந்துநுழை பொழில்ஆரூர் மூலட் டானம் இடம்கொண்ட பெருமானை, இமையோர் போற்றும்அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை,- அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற் றானைச் சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானைவிடக்கிடுகா டிடமாக உடையான் றன்னை மிக்கரண மெரியூட்ட வல்லான் றன்னைமடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம் மன்னியவெம் பெருமானை மதியார் வேள்விஅடர்த்தவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
சுடர்ப்பவளத் திருமேனி வெண்நீற் றானைச், சோதிலிங்கத் தூங்கானை மாடத் தானை,விடக்குஇடுகாடு இடமாக உடையான் தன்னை, மிக்க(அ)ரணம் எரிஊட்ட வல்லான் தன்னை,மடல்குலவு பொழில்ஆரூர் மூலட் டானம் மன்னியஎம் பெருமானை, மதியார் வேள்விஅடர்த்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை,- அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

தாயவனை எவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத் தகுதில்லை நடம்பயிலுந் தலைவன் றன்னைமாயவனும் மலரவனும் வானோ ரேத்த மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் றன்னைமேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம் விரும்பியஎம் பெருமானை யெல்லாம் முன்னேஆயவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
தாய்அவனை, எவ்உயிர்க்கும்; தன்ஒப்பு இல்லாத் தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை;மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறிகடல்நஞ்சு உண்டுஉகந்த மைந்தன் தன்னை;மேயவனைப்,- பொழில்ஆரூர் மூலட் டானம்,- விரும்பியஎம் பெருமானை; எல்லாம் முன்னேஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப் புகலூரும் புறம்பயமும் மேயான் றன்னைமருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானைஇருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத் தினிதமரும் பெருமானை இமையோ ரேத்தஅருளியனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
பொருள்இயல்நல் சொற்பதங்கள் ஆயி னானைப், புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை,மருள்இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை, மறைக்காடும் சாய்க்காடும் மன்னி னானை,இருள்இயல்நல் பொழில்ஆரூர் மூலட் டானத்து இனிதுஅமரும் பெருமானை, இமையோர் ஏத்தஅருளியனை, அரநெறியில் அப்பன் தன்னை,- அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப்பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப் பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச்சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ் சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்றஆலவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
காலனைக்கா லால்காய்ந்த கடவுள் தன்னைக், காரோணம் கழிப்பாலை மேயான் தன்னைப்,பாலனுக்குப் பாற்கடல்அன்று ஈந்தான் தன்னைப், பணிஉகந்த அடியார்கட்கு இனியான் தன்னைச்.சேல்உகளும் வயல்ஆரூர் மூலட் டானம் சேர்ந்துஇருந்த பெருமானைப், பவளம் ஈன்றஆலவனை, அரநெறியில் அப்பன் தன்னை,- அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஒப்பொருவ ரில்லாத ஒருவன் றன்னை ஓத்தூரும் உறையூரும் மேவி னானைவைப்பவனை மாணிக்கச் சோதி யானை மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானை*மெய்ப்பொருளாய் அடியேன துள்ளே நின்ற வினையிலியைத் திருமூலட் டானம் மேயஅப்பொன்னை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.*இச்செய்யுளின் பின்னிரு அடிகள் பிற பதிப்புகளில்காணப்படவில்லை.
சொற்பிரிப்பு
ஒப்புஒருவர் இல்லாத ஒருவன் தன்னை, ஓத்தூரும் உறையூரும் மேவி னானை,வைப்புஅவனை, மாணிக்கச் சோதி யானை, மாருதமும் தீ,வெளி,நீர், மண்,ஆ னானை,மெய்ப்பொருள்ஆய் அடியேனது உள்ளே நின்ற வினைஇலியைத், திருமூலட் டானம் மேயஅப்பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை,- அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பகலவன்றன் பல்லுகுத்த படிறன் றன்னைப் பராய்த்துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானைஇகலவனை இராவணனை இடர்செய் தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம் பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தைஅகலவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
சொற்பிரிப்பு
பகலவன்தன் பல்உகுத்த படிறன் தன்னைப், பராய்த்துறை பைஞ்ஞீலிஇடம் பாவித் தானை,இகலவனை, இராவணனை இடர்செய் தானை, ஏத்தாதார் மனத்துஅகத்துள் இருள்ஆ னானைப்,புகழ்நிலவு பொழில்ஆரூர் மூலட் டானம் பொருந்தியஎம் பெருமானைப், போற்றார் சிந்தைஅகலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்துஅடியேன் அருவினைநோய் அறுத்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.