1
இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந் தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங் கலைமான் மறியேந்து கையா வென்றும்அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும் ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.
சொற்பிரிப்பு
இடர்கெடும்ஆறு எண்ணுதியேல், நெஞ்சே! நீவா! “ஈண்டுஒளிசேர் கங்கைச் சடையாய்!” என்றும்,“சுடர்ஒளியாய்! உள்விளங்கு சோதீ!” என்றும், “தூநீறு சேர்ந்துஇலங்கு தோளா!” என்றும்,“கடல்விடம்அது உண்டுஇருண்ட கண்டா!” என்றும், “கலைமான் மறிஏந்து கையா!” என்றும்,“அடல்விடையாய்! ஆர்அமுதே! ஆதீ!” என்றும், “ஆரூரா!” என்றுஎன்றே, அலறா நில்லே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.