திருமுறை 6 · 6.029 · 10

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்அருமணியை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
திருமணியைத், தித்திக்கும் தேனைப், பாலைத், தீம்கரும்பின் இன்சுவையைத், தெளிந்த தேறல்,குருமணியைக், குழல்,மொந்தை, தாளம், வீணை, கொக்கரையின், சச்சரியின், பாணி யானைப்,பருமணியைப், பவளத்தைப், பசும்பொன், முத்தைப், பருப்பதத்தில் அருங்கலத்தைப், பாவம் தீர்க்கும்அருமணியை, ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப் பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னைமின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத்தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனிஅன்னானை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
பொன்னேபோல் - திருமேனி உடையான் தன்னைப், பொங்குவெண் நூலானைப், புனிதன் தன்னை,மின்னானை, மின்இடையாள் பாகன் தன்னை, வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் தன்னைத்,தன்னானைத், தன்ஒப்பார் இல்லா தானைத், தத்துவனை, உத்தமனைத், தழல்போல் மேனிஅன்னானை, ஆரூரில் அம்மான் தன்னை- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக்கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக் கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக்காற்றானைத் தீயானை நீரு மாகிக் கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ளஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
ஏற்றானை, ஏழ்உலகும் ஆனான் தன்னை, ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான் தன்னைக்,கூற்றானைக், கூற்றம் உதைத்தான் தன்னைக், கொடுமழுவாள் கொண்டதுஓர் கையான் தன்னைக்,காற்றானைத், தீயானை, நீரும் ஆகிக், கடிகமழும் புன்சடைமேல் கங்கை வெள்ள-ஆற்றானை, ஆரூரில் அம்மான் தன்னை- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை மூவாத மேனிமுக் கண்ணி னானைச்சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச் சங்கரனைச் சங்கக் குழையான் றன்னைமந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை மறுமையு மிம்மையு மானான் றன்னைஅந்திரனை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை, மூவாத மேனிமுக் கண்ணி னானைச்,சந்திரனும் வெங்கதிரும் ஆயி னானைச், சங்கரனைச், சங்கக் குழையான் தன்னை,மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை, மறுமையும் இம்மையும் ஆனான் தன்னை,அந்திரனை, ஆரூரில் அம்மான் தன்னை, அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப் பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளேஉறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில் ஓரிபல விடநட்ட மாடி னானைத்துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்றஅறநெறியை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
பிறநெறிஆய்ப், பீடுஆகிப், பிஞ்ஞ கனும்ஆய்ப், பித்தனாய்ப், பத்தர் மனத்தின் உள்ளேஉறநெறிஆய், ஓமம்ஆய், ஈமக் காட்டில், ஓரிபல விட,நட்டம் ஆடி னானைத்;துறநெறிஆய்த், தூபம்ஆய்த், தோற்றம் ஆகி, நாற்றம்ஆய், நல்மலர்மேல் உறையா நின்றஅறநெறியை; ஆரூரில் அம்மான் தன்னை- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பழகிய வல்வினைகள் பாற்று வானைப் பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங்குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக் கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னைவிழவனை வீரட்ட மேவி னானை விண்ணவர்க ளேத்தி விரும்பு வானைஅழகனை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
பழகியவல் வினைகள் பாற்று வானைப், பசுபதியைப், பாவகனைப், பாவம் தீர்க்கும்,குழகனைக், கோள்அரவுஒன்று ஆட்டு வானைக், கொடுகொட்டி கொண்டதுஓர் கையான் தன்னை,விழவனை, வீரட்டம் மேவி னானை, விண்ணவர்கள் ஏத்தி விரும்பு வானை,அழகனை, ஆரூரில் அம்மான் தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சூளா மணிசேர் முடியான் றன்னைச் சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக்கோள்வா யரவ மசைத்தான் றன்னைக் கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னைநாள்வாயும் பத்தர் மனத்து ளானை நம்பனை நக்கனை முக்க ணானைஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
சூளா மணிசேர் முடியான் தன்னைச், சுண்ணவெண் நீறுஅணிந்த சோதி யானைக்,கோள்வாய் அரவம் அசைத்தான் தன்னைக், கொல்புலித்தோல் ஆடைக் குழகன் தன்னை,நாள்வாயும் பத்தர் மனத்துஉ ளானை, நம்பனை, நக்கனை, முக்க ணானை,ஆள்வானை, ஆரூரில் அம்மான் தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப்பத்தனைப் பத்தர் மனத்து ளானைப் பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னைஅத்தனை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
முத்தினை, மணிதன்னை, மாணிக் கத்தை, மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்,கொத்தினை, வயிரத்தைக், கொல்ஏறு ஊர்ந்து கோள்அரவுஒன்று ஆட்டும் குழகன் தன்னைப்,பத்தனைப், பத்தர் மனத்துஉ ளானைப், பரிதிபோல் - திருமேனி உடையான் தன்னை,அத்தனை, ஆரூரில் அம்மான் தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பையா டரவங்கை யேந்தி னானைப் பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானைநெய்யாடு திருமேனி நிமலன் றன்னை நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச் செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானைஐயாறு மேயானை ஆரூ ரானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
பைஆடு அரவம்கை ஏந்தி னானைப், பரிதிபோல் - திருமேனிப் பால்நீற் றானை,நெய்ஆடு திருமேனி நிமலன் தன்னை, நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச்,செய்யானைச், செழும்பவளத் திரள்ஒப் பானைச், செஞ்சடைமேல் வெண்திங்கள் சேர்த்தி னானை,ஐயாறு மேயானை, ஆரூ ரானை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சீரார் முடிபத் துடையான் றன்னைத் தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப்பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப் பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப்போரார் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னைஆரானை ஆரூரி லம்மான் றன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
சீர்ஆர் முடிபத்து உடையான் தன்னைத் தேசுஅழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்பேர்ஆர் பெருமை கொடுத்தான் தன்னைப், பெண்இரண்டும் ஆணும்ஆய் நின்றான் தன்னைப்போர்ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை, வெண்நீறு அணிந்தான் தன்னை,ஆரானை, ஆரூரில் அம்மான் தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.