1
நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங் கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங் கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும் அணியாரூர்த் திருமூலட் டான னாரே.
சொற்பிரிப்பு
நீற்றினையும் நெற்றிமேல் இட்டார் போலும்; நீங்காமே வெள்எலும்பு பூண்டார் போலும்;காற்றினையும் கடிதுஆக நடந்தார் போலும்; கண்ணின்மேல் கண்ஒன்று உடையார் போலும்;கூற்றினையும் குரைகழலால் உதைத்தார் போலும்; கொல்புலித்தோல் ஆடைக் குழகர் போலும்;ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார் போலும்- அணிஆரூர்த் திருமூலட் டான னாரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.