திருமுறை 6 · 6.027 · 10

திருவாரூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க் கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
சொற்பிரிப்பு
பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற புண்ணியங்காள்! தீவினைகாள்! திருவே! நீங்கள்இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, கிடந்ததுதான்; யானேல், வானோர்தம்மானைத், தலைமகனைத் தண்நல் ஆரூர்த் தடங்கடலைத், தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்எம்மான்தன் அடித்தொடர்வான் உழிதர் கின்றேன்; இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க் கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன் தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.
சொற்பிரிப்பு
ஐம்பெருமா பூதங்காள்! ஒருவீர் வேண்டிற்று ஒருவீர்வேண் டீர்!ஈண்டுஇவ் அவனி எல்லாம்உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே, நுகர்போகம்; யானேல், வானோர்உம்பரும்ஆய் ஊழியும்ஆய் உலகுஏழ் ஆகி ஒள்ஆரூர் நள்அமிர்துஆம் வள்ளல், வானோர்-தம்பெருமான் ஆய்நின்ற அரனைக், காண்பேன்; தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச் செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்றுபல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப் பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த் தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.
சொற்பிரிப்பு
சில்உருவில் குறிஇருத்தி, நித்தல் பற்றிச், செழுங்கணால் நோக்கும்இது ஊக்கம் அன்று;பல்உருவில் - தொழில்பூண்ட பஞ்ச பூதப்- பளகீர்!உம் வசம்அன்றே! பாரேல் எல்லாம்சொல்உருவில் சுடர்மூன்றுஆய், உருவம் மூன்றுஆய்த், தூநயனம் மூன்றுஆகி, ஆண்ட ஆரூர்நல்உருவில் சிவன்அடியே அடைவேன்; நும்மால் நமைப்புண்ணேன்; கமைத்துநீர் நடமின் க(ள்)ளே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ வையகமே போதாதே யானேல் வானோர்பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப் புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தைதன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத் தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.
சொற்பிரிப்பு
உன்உருவில் சுவைஒளிஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்புஆகும் ஐவீர்! நுங்கள்மன்உருவத்து இயற்கைகளால் வைப்பீர்க்கு, ஐயோ! வையகமே போதாதே; யானேல், வானோர்பொன்உருவைத், தென்ஆரூர் மன்னு குன்றைப், புவிக்குஎழில்ஆம் சிவக்கொழுந்தைப், புகுந்துஎன் சிந்தைதன்உருவைத் தந்தவனை, எந்தை தன்னைத், தலைப்படுவேன்; துலைப்படுப்பான் தருக்கேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம் உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல் மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
சொற்பிரிப்பு
துப்பினைமுன் பற்றுஅறா விறலே! மிக்க சோர்வுபடு சூட்சியமே! சுகமே! நீங்கள்ஒப்பனையைப் பாவித்துஇவ் உலகம் எல்லாம் உழறும்இது குறைமுடிப்பீர்க்கு அரிதே; என்தன்வைப்பினைப்,பொன் மதில்ஆரூர் மணியை, வைகல் மணாளனை,எம் பெருமானை, வானோர் தங்கள்அப்பனைச்,செப் பிடஅடைவேன்; நும்மால் நானும் ஆட்டுணேன்; ஓட்டந்து,ஈங்கு அலையேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக் குரோதமே உலோபமே பொறையே நீங்கள்உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம் உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்அங்கமலத் தயனொடுமா லாகி மற்றும் அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச்செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச் செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே.
சொற்பிரிப்பு
பொங்குமத மானமே! ஆர்வச் செற்றக்- குரோதமே! உலோபமே! பொறையே! நீங்கள்உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை எல்லாம் உழறும்இது குறைமுடிப்பீர்க்கு அரிதே? யானேல்,அம்கமலத்து அயனொடுமால் ஆகி, மற்றும் அதற்குஅப்பால் ஒன்றுஆகி, அறிய ஒண்ணாச்செங்கனகத் தனிக்குன்றைச், சிவனை, ஆரூர்ச் செல்வனைச்,சேர் வேன்;நும்மால் செலுத்து ணேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள் குறிநின்ற தமையாதே யானேல் வானோர்அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
சொற்பிரிப்பு
இடர்,பாவம் என,மிக்க துக்க, வேட்கை, வெறுப்பே,என்று அனைவீரும் உலகை ஓடிக்குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறிநின்றது அமையாதே? யானேல், வானோர்-அடையார்தம் புரம்மூன்றும் எரிசெய் தானை, அமரர்கள்தம் பெருமானை, அரனை, ஆரூர்உடையானைக், கடுகச்சென்று அடைவேன்; நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்துஈங்கு அலையேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்நிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க் கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற்பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற் பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே.
சொற்பிரிப்பு
விரைந்துஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா வெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள்நிரைந்துஓடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, நுகர்போகம்? யானேல், வானோர்கரைந்துஓட வருநஞ்சை அமுது செய்த கற்பகத்தைத், தற்பரத்தைத், திருஆ ரூரில்பரஞ்சோதி தனைக்,காண்பேன்; படேன்,நும் பண்பில்; பரிந்துஓடி ஓட்டந்து பகட்டேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடிநாள்வாயு நும்முடைய மம்ம ராணை நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
சொற்பிரிப்பு
மூள்வுஆய தொழில்பஞ்சேந் திரிய வஞ்ச- முகரிகாள்! முழுதும்இவ் உலகை ஓடிநாள்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே? யானேல், வானோர்நீள்வான முகடுஅதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணைப், பாதாளக் கருவை, ஆரூர்ஆள்வானைக், கடுகச்சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன்; ஓட்டந்துஈங்கு அலையேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித் துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல் செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்கதருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகந் தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டுஇரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத் திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
சொற்பிரிப்பு
சுருக்கமொடு, பெருக்கம்,நிலை நிற்றல், பற்றித் துப்பறைஎன்று அனைவீர்!இவ் உலகை ஓடிச்செருக்கிமிகை செலுத்திஉம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே? யானேல், மிக்கதருக்கிமிக வரைஎடுத்த, அரக்கன் ஆகம் தளரஅடி எடுத்து,அவன்தன் பாடல் கேட்டு(வ்)இரக்கம்எழுந்து அருளியஎம் பெருமான் பாதத்து இடையிலேன்; கெடுவீர்காள்! இடறேன் மி(ன்)னே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.