1
பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் பண்டொருகால் தசமுகனை அழுவித் தானைவாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச்சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச் சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானைஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.
சொற்பிரிப்பு
பாதித்தன் திருஉருவில் பெண்கொண் டானைப், பண்டுஒருகால் தசமுகனை அழுவித் தானை,வாதித்துத் தடமலரான் சிரம்கொண் டானை, வன்கருப்புச் சிலைக்காமன் உடல்அட் டானைச்,சோதிச்சந் திரன்மேனி மறுச்செய் தானைச், சுடர்அங்கி தேவனைஓர் கைக்கொண் டானை,ஆதித்தன் பல்கொண்ட அம்மான் தன்னை,- ஆரூரில் கண்டுஅடியேன் அயர்த்த ஆறே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.