1
உயிரா வணமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியி னுரு வெழுதிஉயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோ டொட்டி வாழ்திஅயிரா வணமேறா தானே றேறி அமரர்நா டாளாதே ஆரூ ராண்டஅயிரா வணமேயென் னம்மா னேநின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
சொற்பிரிப்பு
உயிரா வணம்இருந்து, உற்று நோக்கி, உள்ளக் கிழியின் உருஎ ழுதி,உயிர்ஆ வணம்செய்திட்டு, உன்கைத் தந்தால், உணரப் படுவாரோடு ஒட்டி, வாழ்தி;அயிரா வணம்ஏறாது, ஆன்ஏறு ஏறி, அமரர்நாடு ஆளாதே, ஆரூர் ஆண்டஅயிரா வணமே!என் அம்மா னே!நின் அருள்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.