1
கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண் கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண் அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண் எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்செம்மானத் தொளியன்ன மேனி யான்காண் திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.
சொற்பிரிப்பு
கைம்மான மதகளிற்றின் உரிவை யான்காண்; கறைக்கண்டன் காண்;கண்ஆர் நெற்றி யான்காண்;அம்மான்காண்; ஆடுஅரவுஒன்று ஆட்டி னான்காண்; அனல்ஆடி காண்;அயில்வாய்ச் சூலத் தான்காண்;எம்மான்காண்; ஏழ்உலகும் ஆயி னான்காண்; எரிசுடரோன் காண்;இலங்கும் மழுவா ளன்காண்;செம்மானத்து ஒளிஅன்ன மேனி யான்காண்- திருஆரூ ரான்காண்,என் சிந்தை யானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.