திருமுறை 6 · 6.023 · 10

திருமறைக்காடு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
மறைக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
தூண்டு சுடர்அனைய சோதி கண்டாய்; தொல்அமரர் சூளா மணிதான் கண்டாய்;காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்;வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்; மெய்ந்நெறி கண்டாய்; விரதம் எல்லாம்மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கைகிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழுஞ் சோதிமெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்வைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
கைகிளரும் வீணை வலவன் கண்டாய்; காபாலி கண்டாய்; திகழும் சோதிமெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்; மெய்அடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்;பைகிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்; பராபரன் கண்டாய்; பாசூரான் கண்டாய்;வைகிளரும் கூர்வாள் படையான் கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சிலந்திக் கருள்முன்னஞ் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
சிலந்திக்கு அருள்முன்னம் செய்தான் கண்டாய்; திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்;நிலம்,துக்கம், நீர்,வளி,தீ, ஆனான் கண்டாய்; நிரூபியாய் ரூபியும்ஆய் நின்றான் கண்டாய்;சலம்துக்க சென்னிச் சடையான் கண்டாய்; தாமரையான், செங்கண்மால், தானே கண்டாய்;மலம்துக்க மால்விடைஒன்று ஊர்ந்தான் கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய் காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய் புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்வெள்ளி மிளிர்பிறைமுடிமேற் சூடி கண்டாய் வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேயவள்ளி மணாளற்குத் தாதை கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்; காலனையும் காலால் கடந்தான் கண்டாய்;புள்ளி உழைமானின் தோலான் கண்டாய்; புலிஉரிசேர் ஆடைப் புனிதன் கண்டாய்;வெள்ளிமிளிர் பிறைமுடிமேல் சூடி கண்டாய்; வெண்நீற்றான் கண்டாய்;நம் செந்தில் மேயவள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய் முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணா மலையுறையு மண்ணல் கண்டாய்வாரி மதகளிறே போல்வான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
மூரி முழங்குஒலிநீர் ஆனான் கண்டாய்; முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்;ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்; இன்அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்;ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்; அண்ணா மலைஉறையும் அண்ணல் கண்டாய்;வாரி மதகளிறே போல்வான் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய் நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
ஆடல்மால் யானை உரித்தான் கண்டாய்; அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்;கோடியான் கண்டாய்; குழகன் கண்டாய்; குளிர்ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்;நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்; நன்மையோடு இம்மைமற்று அம்மை எல்லாம்வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வேலைசேர் நஞ்ச மிடற்றான் கண்டாய் விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய் அமரர்கள் தாமேத்து மண்ணல் கண்டாய்பால்நெய்சே ரானஞ்சு மாடி கண்டாய் பருப்பதத் தான்கண்டாய் பரவை மேனிமாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்; விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்;ஆலைசேர் வேள்வி அழித்தான் கண்டாய்; அமரர்கள் தாம்ஏத்தும் அண்ணல் கண்டாய்;பால்நெய்சேர் ஆன்அஞ்சும் ஆடி கண்டாய்; பருப்பதத்தான் கண்டாய்; பரவை மேனிமாலைஓர் கூறுஉடைய மைந்தன் கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்டிம்மை பயக்கு மிறைவன் கண்டாய் என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போகமம்ம ரறுக்கு மருந்து கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்; அம்தேன் தெளிகண்டாய்; ஆக்கம் செய்திட்டுஇம்மை பயக்கும் இறைவன் கண்டாய்; என்நெஞ்சே! உன்னில் இனியான் கண்டாய்;மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்; வெண்காடன் கண்டாய்; வினைகள் போகமம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையு மானான் கண்டாய்ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய் ஆதியு மந்தமு மானான் கண்டாய்பால விருத்தனு மானான் கண்டாய் பவளத் தடவரையே போல்வான் கண்டாய்மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்; முத்தமிழும் நால்மறையும் ஆனான் கண்டாய்;ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்; ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்;பால விருத்தனும் ஆனான் கண்டாய்; பவளத் தடவரையே போல்வான் கண்டாய்;மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அயனவனும் மாலவனு மறியா வண்ணம் ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்துயரிலங்கை வேந்தன் துளங்க வன்று சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
சொற்பிரிப்பு
அயன்அவனும் மால்அவனும் அறியா வண்ணம், ஆர்அழலாய் நீண்டு,உகந்த அண்ணல் கண்டாய்;துயர்இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதிவிர லால்உற வைத்தான் கண்டாய்;பெயர(அ)வற்குப் பேர்அருள்கள் செய்தான் கண்டாய்; பேரும், பெரும்படையோடு, ஈந்தான் கண்டாய்;மயர்உறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்- மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.