திருமுறை 6 · 6.022 · 11

திருநாகைக்காரோணம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
நாகைக்காரோணம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பாரார் பரவும் பழனத் தானைப் பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைசீரார் செழும்பவளக் குன்றொப் பானைத் திகழுந் திருமுடிமேற் றிங்கள் சூடிப்பேரா யிரமுடைய பெம்மான் றன்னைப் பிறர்தன்னைக் காட்சிக் கரியான் றன்னைக்காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
பாரார் பரவும் பழனத் தானைப், பருப்பதத் தானைப்,பைஞ் ஞீலி யானைச்,சீரார் செழும்பவளக் குன்றுஒப் பானைத், திகழும் திருமுடிமேல் - திங்கள் சூடிப்பேர்ஆ யிரம்உடைய பெம்மான் தன்னைப், பிறர்தன்னைக் காட்சிக்கு அரியான் தன்னைக்,-கார்ஆர் கடல்புடைசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விண்ணோர் பெருமானை வீரட் டானை வெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப்பெண்ணானை ஆணானைப் பேடி யானைப் பெரும்பெற்றத் தண்புலியூர் பேணி னானைஅண்ணா மலையானை ஆனைந் தாடும் அணியாரூர் வீற்றிருந்த அம்மான் றன்னைக்கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
விண்ணோர் பெருமானை, வீரட் ட(ன்)னை, வெண்நீறு மெய்க்குஅணிந்த மேனி யானைப்,பெண்ணானை, ஆணானைப், பேடி யானைப், பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை,அண்ணா மலையானை, ஆன்ஐந்து ஆடும் அணிஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னைக்,-கண்ஆர் கடல்புடைசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சிறையார் வரிவண்டு தேனே பாடுந் திருமறைக்காட் டெந்தை சிவலோ கனைமறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும் வலிவலமுந் தேவூரும் மன்னி யங்கேஉறைவானை உத்தமனை ஒற்றி யூரிற் பற்றியாள் கின்ற பரமன் றன்னைக்கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
சிறைஆர் வரிவண்டு தேனே பாடும் திருமறைக் காட்டுஎந்தை சிவலோ க(ன்)னை,மறைஆன்ற வாய்மூரும் கீழ்வே ளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கேஉறைவானை, உத்தமனை, ஒற்றி யூரில் பற்றிஆள் கின்ற பரமன் தன்னைக்,-கறைஆர் கடல்புடைசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானை ஆச்சிரா மன்னகரு மானைக் காவும்முன்னமே கோயிலாக் கொண்டான் றன்னை மூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச்சின்னமாம் பன்மலர்க ளன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக்கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
அன்னம்ஆம் பொய்கைசூழ் அம்ப ரானை, ஆச்சிரா ம(ந்)நகரும் ஆனைக் காவும்முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை, மூவுலகும் தான்ஆய மூர்த்தி தன்னைச்,சின்னம்ஆம் பல்மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தி னானைக்,-கன்னிஅம் புன்னைசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நடையுடைய நல்லெருதொன் றூர்வான் றன்னை ஞானப் பெருங்கடலை நல்லூர் மேயபடையுடைய மழுவாளொன் றேந்தி னானைப் பன்மையே பேசும் படிறன் றன்னைமடையிடையே வாளை யுகளும் பொய்கை மருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக்கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
நடைஉடைய நல்எருதுஒன்று ஊர்வான் தன்னை; ஞானப் பெருங்கடலை; நல்லூர் மேய,படைஉடைய மழுவாள்ஒன்று ஏந்தி னானைப்; பன்மையே பேசும் படிறன் தன்னை;மடைஇடையே வாளை உகளும் பொய்கை மருகல்வாய்ச் சோதி மணிகண் ட(ன்)னைக்;-கடைஉடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புலங்கள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப் பூம்புகார்க் கற்பகத்தை புன்கூர் மேயஅலங்கலங் கழனிசூழ் அணிநீர்க் கங்கை அவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் றன்னைஇலங்கு தலைமாலை பாம்பு கொண்டே ஏகாச மிட்டியங்கும் ஈசன் றன்னைக்கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
புலங்கள்பூந் தேறல்வாய்ப் புகலிக் கோனைப்; பூம்புகார்க் கற்பகத்தைப்; புன்கூர் மேயஅலங்கல்அம் கழனிசூழ் அணிநீர்க் கங்கை அவிர்சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை;இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம் இட்டுஇயங்கும் ஈசன் தன்னைக்;-கலங்கல் கடல்புடைசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப் புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச்சின்மணிய மூவிலைய சூலத் தானைத் தென்சிராப் பள்ளிச் சிவலோ கனைமன்மணியை வான்சுடலை யூராப் பேணி வல்லெருதொன் றேறும் மறைவல் லானைக்கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
பொன்மணிஅம் பூங்கொன்றை மாலை யானைப், புண்ணியனை, வெண்நீறு பூசி னானைச்,சில்மணிய மூஇலைய சூலத் தானைத், தென்சிராப் பள்ளிச் சிவலோ க(ன்)னை,மன்மணியை, வான்சுடலை ஊராப் பேணி வல்எருதுஒன்று ஏறும் மறைவல் லானைக்,-கல்மணிகள் வெண்திரைசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வெண்டலையும் வெண்மழுவு மேந்தி னானை விரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப்புண்டலைய மால்யானை யுரிபோர்த் தானைப் புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னைஎண்டிசையு மெரியாட வல்லான் றன்னை ஏகம்ப மேயானை எம்மான் றன்னைக்கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தி னானை, விரிகோ வணம்அசைத்த வெண்நீற் றானைப்,புண்தலைய மால்யானை உரிபோர்த் தானைப், புண்ணியனை, வெண்நீறு அணிந்தான் தன்னை,எண்திசையும் எரிஆட வல்லான் தன்னை, ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னைக்,-கண்டல்அம் கழனிசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் றன்னைத் தொன்னரக நன்னெறியாற் றூர்ப்பான் றன்னைவில்லானை மீயச்சூர் மேவி னானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப்பொல்லாதார் தம்மரண மூன்றும் பொன்றப் பொறியரவம் மார்பாரப் பூண்டான் றன்னைக்கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
சொல்ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னைத்; தொல்-நரகம் நன்நெறியால் - தூர்ப்பான் தன்னை;வில்லானை; மீயச்சூர் மேவி னானை; வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லிப்,பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப், பொறிஅரவம் மார்புஆரப் பூண்டான் தன்னைக்,கல்லாலின் கீழானைக்;- கழிசூழ் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும் மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யுஞ்சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும் மெய்யென்று கருதாதே போத நெஞ்சேபனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தை அவன்பற்றே பற்றாகக் காணி னல்லாற்கனைகடலின் றென்கழிசூழ் அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
மனைதுறந்த வல்அமணர் தங்கள் பொய்யும், மாண்புஉரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்,சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும், மெய்என்று கருதாதே, போத,- நெஞ்சே!-பனைஉரியைத் தன்உடலில் போர்த்த எந்தை அவன்பற்றே பற்றுஆகக் காணின் அல்லால்,கனைகடலின் தெண்கழிசூழ் அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நெடியானும் மலரவனும் நேடி யாங்கே நேருருவங் காணாமே சென்று நின்றபடியானைப் பாம்புரமே காத லானைப் பாம்பரையோ டார்த்த படிறன் றன்னைச்செடிநாறும் வெண்டலையிற் பிச்சைக் கென்று சென்றானை நின்றியூர் மேயான் றன்னைக்கடிநாறு பூஞ்சோலை அந்தண் நாகைக் காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.
சொற்பிரிப்பு
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர்உருவம் காணாமே சென்று நின்றபடியானைப், பாம்புரமே காத லானைப், பாம்புஅரையோடு ஆர்த்த படிறன் தன்னைச்,செடிநாறும் வெண்தலையில் பிச்சைக்கு என்று சென்றானை, நின்றியூர் மேயான் தன்னைக்,-கடிநாறு பூஞ்சோலை அம்தண் நாகைக்- காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.