1
முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங் கல்லலகு பாணி பயின்றார் போலுங்கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர் குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
சொற்பிரிப்பு
முடித்தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும்;கடித் தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்;கொடித் தாமரைக் காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;அடித் தாமரை மலர்மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.