1
ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானைமாதிமைய மாதோர்கூ றாயி னானை மாமலர்மே லயனோடு மாலுங் காணாநாதியை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே.
சொற்பிரிப்பு
ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்கத் தன் கை வாளால்சேதித்த திருவடியைச், செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை,மாமதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மாமலர்மேல் அயனோடு மாலும் காணாநாதியை, நம்பியை, நள்ளாற்றானை,- நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.