திருமுறை 6 · 6.019 · 11

திருவாலவாய்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
ஆலவாய் (மதுரை)
நாடு
பாண்டியநாடு

1

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்வளைத்தானை; வல்அசுரர் புரங்கள் மூன்றும், வரைசிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்துளைத்தானைச், சுடுசரத்தால் துவள நீறாத்; தூமுத்த வெண்முறுவல் உமையோடு ஆடித்திளைத்தானைத்; தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப் பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானைஉண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக் கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத்தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல்ஆடு புரம்மூன்றும் பொடி செய்தானைப்,பண்நிலவு பைம்பொழில்சூழ் பழனத்தானைப், பசும்பொன்னின் நிறத்தானைப், பால் நீற்றானை,உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடன்ஆகி இருந்தான் தன்னைத்,-தெள்-நிலவு தென்கூடல் திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப்பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப் பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக்காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித்தீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னைப்,பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னைப், பகைத்து எழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்,கால்-திரளாய் மேகத்தின் உள்ளே நின்று கடுங்குரல்ஆய் இடிப்பானைக், கண்ஓர் நெற்றித்,தீத்திரளைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

வானமிது வெல்லா முடையான் றன்னை வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்கானமதில் நடமாட வல்லான் றன்னைக் கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை உணர்வாகி அடியேன துள்ளே நின்றதேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரிஅரவக் கச்சானை; வன்பேய் சூழக்கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னைக், கடைக்கண்ணால் மங்கை உமை நோக்கா; என்மேல்ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வுஆகி அடியேனது உள்ளே நின்றதேன்அமுதைத்;- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்பேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப் பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்சீரானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
ஊரானை, உலகு ஏழாய் நின்றான் தன்னை, ஒற்றை வெண்பிறையானை, உமையோடு என்றும்பேரானைப், பிறர்க்கு என்றும் அரியான் தன்னைப், பிணக்காட்டில் நடம்ஆடல் பேயோடு என்றும்ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை, அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்சீரானைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூவுலகுந் தானே யெங்கும்பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப் படியெழுத லாகாத மங்கை யோடும்மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்ததேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை, மூஉலகும் தானே எங்கும்பாவனைப், பாவம் அறுப்பான் தன்னைப், படி எழுதல் ஆகாத மங்கையோடும்மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்ததேவனைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத் துன்பந் துடைத்தாள வல்லான் றன்னைஇறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை எல்லி நடமாட வல்லான் றன்னைமறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்சிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத், துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை,இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை, எல்லி நடம் ஆட வல்லான் தன்னை,மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை, மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்சிறந்தானைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச் சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்தாயானைத் தவமாய தன்மை யானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானைக், கருத்து அறிந்து முடிப்பான் தன்னைத்,தூயானைத், தூவெள்ளை ஏற்றான் தன்னைச், சுடர்த்திங்கள் சடையானைத், தொடர்ந்து நின்ற என்தாயானைத், தவம் ஆய தன்மையானைத், தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்சேயானைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப் பழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானைவகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானைமிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை மேலாய தேவாதி தேவர்க் கென்றுந்திகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
பகைச்சுடராய்ப் பாவம் அறுப்பான் தன்னைப், பழி இலியாய் நஞ்சுஉண்டு அமுது ஈந்தானை,வகைச்சுடராய் வல்அசுரர் புரம் அட்டானை, வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை,மிகைச்சுடரை, விண்ணவர்கள் மேல் அப்பாலை, மேலாய தேவாதி தேவர்க்கு என்றும்திகைச்சுடரைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மலையானை மாமேறு மன்னி னானை வளர்புன் சடையானை வானோர் தங்கள்தலையானை என்றலையின் உச்சி யென்றுந் தாபித் திருந்தானைத் தானே யெங்குந்துலையாக ஒருவரையு மில்லா தானைத் தோன்றாதார் மதின்மூன்றுந் துவள வெய்தசிலையானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
மலையானை, மாமேறு மன்னினானை, வளர் புன்சடையானை, வானோர் தங்கள்தலையானை, என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானைத், தானே எங்கும்துலை ஆக ஒருவரையும் இல்லாதானைத், தோன்றாதார் மதில்மூன்றும் துவள எய்தசிலையானைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத் தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப் பரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னைஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை அளவிலாப் பல்லூழி கண்டு நின்றதீர்த்தனைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
சொற்பிரிப்பு
தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னைத், தொல்-நரம்பின் இன்இசை கேட்டு அருள் செய்தானைப்,பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப், பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை,ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல்ஊழி கண்டு நின்றதீர்த்தனைத்,- தென்கூடல் - திருஆலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.