திருமுறை 6 · 6.017 · 10

திருவிடைமருதூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்நீறு தடவந் திடப மேறி நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்கூறுங் குணமுடையர் கோவ ணத்தர் கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்ஈறுந் நடுவு முதலு மாவார் இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்; படை உடையர்; அம்பொன் - தோள்மேல்நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம் பலிகொள்வர்; மொய்த்த பூதம்கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோடால வேடத்தர்; கொள்கை சொல்லின்,ஈறும் நடுவும் முதலும் ஆவார்- இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மங்குல் மதிவைப்பர் வான நாடர் மடமா னிடமுடையர் மாத ராளைப்பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர் பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர் சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார் இடைமருது மேவி யிடங் கொண்டாரே.
சொற்பிரிப்பு
மங்குல் மதிவைப்பர்; வான நாடர்; மடமான் இடம்உடையர்; மாதராளைப்பங்கில் மிகவைப்பர்; பால்போல் நீற்றர்; பளிக்கு வடம்புனைவர்; பாவ நாசர்;சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்; சரிதை பலஉடையர்; தன்மை சொல்லின்,எங்கும் பலிதிரிவர்; என்உள் நீங்கார்- இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர் அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர் கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர் கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அருவரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்;காலம் பல கழித்தார்; கறைசேர் கண்டர்; கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்குக்கோலம் பலஉடையர்; கொல்லை ஏற்றர்; கொடுமழுவர்; கோழம்பம் மேய ஈசர்;ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ் செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர் மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்; திருஆரூர் என்றும் உள்ளார்;வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்; மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்;நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும்ஈசர்; புனல்பொன்னித் தீர்த்தர் - வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங் கரவாதே தந்நினைய கிற்பார் பாவந்துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர் தூய மறைமொழியர் தீயா லொட்டிநிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர் நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார் இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
கரப்பர், கரியமனக் கள்வர்க்கு; உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம்துரப்பர்; தொடுகடலின் நஞ்சம் உண்பர்; தூய மறைமொழியர்; தீயால் ஒட்டிநிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள்சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம்இரப்பர்; எமை ஆள்வர்; என் உள் நீங்கார்- இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக் குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்தபொடியாரு மேனியர் பூதிப் பையர் புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்அடியார் குடியாவர் அந்த ணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்றஇடியார் களிற்றுரியார் எவரும் போற்ற இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடிக், குளிர்கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்தபொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்;அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார்; அமரர் போற்றஇடிஆர் களிற்று உரியார் - எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பச்சை நிறமுடையர் பாலர் சாலப் பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் கலனொன்று கையேந்தி இல்லந் தோறும்பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப் பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்இச்சை மிகஅறிவர் என்று முள்ளார் இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
பச்சை நிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்; பிழை எல்லாம் நீக்கி ஆள்வர்கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று கை ஏந்தி, இல்லம் தோறும்பிச்சை கொள நுகர்வர்; பெரியர், சாலப்; பிறங்கு சடைமுடியர்; பேணும் தொண்டர்இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்- இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

காவார் சடைமுடியர் காரோ ணத்தர் கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்பாவார் பொருளாளர் வாளார் கண்ணி பயிலுந் திருவுருவம் பாக மேயார்பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர் புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்டஏவார் சிலைமலையர் எங்குந் தாமே இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
காஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம் மன்னினார்; பன்னும் இன்சொல்பாஆர் பொருளாளர்; வாள்ஆர் கண்ணி பயிலும் திருஉருவம் பாகம் மேயார்;பூஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம் மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்டஏ ஆர் சிலைமலையர்; எங்கும், தாமே;- இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர் பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும் பிரியா ரொருநாளும் பேணு காட்டில்எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
புரிந்தார், நடத்தின்கண்; பூத நாதர்; பொழில் ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில்பிரிந்து ஆர் அகல்வாய பேயும் தாமும் பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில்எரிந்தார் அனல்,-உகப்பர்,- ஏழில் ஓசை; எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்பால்இருந்தார் - இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர் மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
சொற்பிரிப்பு
விட்டு இலங்கு மாமழுவர்; வேலை நஞ்சர்; விடங்கர்; விரிபுனல்சூழ் வெண்காட்டு உள்ளார்;மட்டுஇலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர் மழபாடி உள்உறைவர்; மாகாளத்தர்;சிட்டு இலங்கு வல்அரக்கர் கோனை அன்று செழுமுடியும் தோள் ஐந்-நான்கு அடரக் காலால்இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், வென்றி;- இடைமருது மேவி இடம்கொண்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.