திருமுறை 6 · 6.015 · 11

திருக்கருகாவூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கருகாவூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்ஒருகா லுமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவிற் குரையா டியாங்கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
குருகாம்; வயிரமாம்; கூறும் நாளாம்; கொள்ளும் கிழமையாம்; கோளே தானாம்;பருகா அமுதமாம்; பாலின் நெய்யாம்; பழத்தின் இரதமாம்; பாட்டில் பண்ணாம்;ஒருகால் உமையாள் ஓர் பாகனுமாம் உள்-நின்ற நாவிற்கு உரையாடியாம்;கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டு முருவமாம் விரும்பி நின்றபத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம் பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாந்தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்றத் தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்றகத்தாம் அடியேற்குக் காணா காட்டுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
வித்தாம்; முளையாகும்; வேரே தானாம்; வேண்டும் உருவமாம்; விரும்பி நின்றபத்தாம் அடியார்க்கு ஓர் பாங்கனுமாம்; பால் நிறமுமாம்; பரஞ்சோதி தானாம்;தொத்தாம் அமரர் கணம் சூழ்ந்து போற்றத் தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்றகத்துஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்றகோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகிஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்றுகாத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
பூத்தானாம்; பூவின் நிறத்தானுமாம்; பூக்குளால் வாசமாய் மன்னி நின்றகோத் தான் ஆம்; கோல்வளையாள் கூறன் ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவானாம்; என் நெஞ்சத்து உள்ளே நின்றுகாத்தானாம், காலன் அடையா வண்ணம்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இரவனாம் எல்லி நடமா டியாம் எண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம்அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம் ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்கரவனாங் காட்சிக் கெளியா னுமாங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
இரவனாம்; எல்லி நடம்ஆடியாம்; எண்திசைக்கும் தேவனாம்; என் உளானாம்;அரவனாம்; அல்லல் அறுப்பானுமாம்; ஆகாச மூர்த்தியாம்; ஆன்ஏறு ஏறும்குரவனாம்; கூற்றை உதைத்தான் தானாம்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்கரவனாம்; காட்சிக்கு எளியானுமாம்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும் பரிசொன் றறியாமை நின்றான் றானாம்உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்றுஅடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம் அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
படைத்தானாம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு ஒன்று அறியாமை நின்றான் தானாம்;உடைத்தானாம்; ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்)அடைத்தானாம், சூலம் மழு; ஓர் நாகம் அசைத்தானாம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்;கடைத்தானாம், கள்ளம் அறிவார் நெஞ்சின்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் மூவாத மேனிமுக் கண்ணி னானாஞ்சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ் செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்மாலனாம் மங்கையோர் பங்க னாகும் மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாங்காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
மூலனாம்; மூர்த்தியாம்; முன்னே தானாம்; மூவாத மேனி முக்கண்ணினானாம்;சீலனாம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தானாம்;மாலனாம்; மங்கைஓர் பங்கன் ஆகும்; மன்றுஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம்காலனாம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அரைசே ரரவனாம் ஆலத் தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர்திரைசேர் திருமுடித் திங்க ளானாந் தீவினை நாசனென் சிந்தை யானாம்உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம் உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
அரைசேர் அரவனாம்; ஆலத்தானாம்; ஆதிரை நாளானாம்; அண்ட வானோர்திரைசேர் திருமுடித் திங்களானாம்; தீவினை நாசன்,என் சிந்தையானாம்;உரைசேர் உலகத்தார் உள்ளா னும்ஆம்; உமையாள் ஓர் பாகனாம்; ஓத வேலிக்கரைசேர் கடல்நஞ்சை உண்டான் ஆகும்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்படிதானாம் பாவ மறுப்பா னாகும் பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்கடியானாங் காட்சிக் கரியா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
துடியாம்; துடியின் முழக்கம் தானாம்; சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பானாம்;படிதானாம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால் நீற்றனாம்; பரஞ்சோதி தானாம்;கொடியானாம் கூற்றை உதைத்தான் ஆகும்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்கடியானாம்; காட்சிக்கு அரியான் ஆகும்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம் பலபலவும் பாணி பயின்றான் றானாம்எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம் என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியானாம்; விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்;பட்டு, உருவ மால் யானைத் தோல் கீண்டானாம்; பலபலவும் பாணி பயின்றான் தானாம்;எட்டு உருவ - மூர்த்திஆம்; எண்தோளானாம்; என் உச்சி மேலானாம்; எம்பிரானாம்;கட்டுஉருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச்செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் சிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம்அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்கறுத்திருந்த கண்ட முடையான் போலுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள் இருந்து,அங்கு உள்-நோய் களைவான் தானாய்ச்,செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் சிலை குனியத் தீ மூட்டும் திண்மையானாம்;அறுத்திருந்த கையானாம், அம்தார் அல்லி இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்;கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்துஇறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே ஆகாய மந்திரமு மானா னாகுங்கறுத்தானாங் காலனைக் காலால் வீழக் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
சொற்பிரிப்பு
ஒறுத்தானாம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி; உடனே வைத்துஇறுத்தானாம், எண்ணான் முடிகள் பத்தும்; இசைந்தானாம்; இன்இசைகள் கேட்டான் ஆகும்;அறுத்தானாம், அஞ்சும் அடக்கி; அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்;கறுத்தானாம், காலனைக் காலால் வீழக்; கண்ணாம் - கருகாவூர் எந்தை தானே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.