1
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கிநனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
சொற்பிரிப்பு
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்; நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்; செழுமதியின் தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-இனம் துருவி, மணிமகுடத்து ஏறத், துற்ற இனமலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கிநனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்- நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.