திருமுறை 6 · 6.013 · 10

திருப்புறம்பயம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
புறம்பயம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்நடமாடு நன்மருகல் வைகி நாளும் நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்படுமாலை வண்டறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
கொடிமாட நீள் தெருவு கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும்,நடமாடும் நல்மருகல், வைகி; நாளும் நலமாகும் ஒற்றியூர் ஒற்றி ஆகப்;படுமாலை வண்டு அறையும் பழனம், பாசூர், பழையாறும், பாற்குளமும், கைவிட்டு; இந்நாள்பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழப், “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முற்றொருவர் போல முழுநீ றாடி முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டுஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்மற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
முற்று ஒருவர் போல முழுநீறு ஆடி, முளைத்திங்கள் சூடி, முந்நூலும் பூண்டு,ஒற்று ஒருவர் போல உறங்கு வேன் கை ஒளிவளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார்;மற்று ஒருவர் இல்லைத், துணை எனக்கு; மால் கொண்டால் போல மயங்குவேற்குப்,புற்று அரவக் கச்சுஆர்த்துப் பூதம் சூழப், “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர் ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்ஏகாச மாவிட்டோ டொன்றேந் திவந் திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்போகாத வேடத்தர் பூதஞ் சூழப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர், ஐந்தலைய மாசுணம் கொண்டு, அம்பொன் தோள்மேல்ஏகாசமா இட்டு,ஓடு ஒன்று ஏந்திவந்து, “இடு, திருவே, பலி!”என்றார்க்கு, இல்லே புக்கேன்;பாகு ஏதும் கொள்ளார்; பலியும் கொள்ளார்; பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்,போகாத வேடத்தர் பூதம் சூழப், “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர்நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங் கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
பல் மலிந்த வெண்தலை கையில் ஏந்திப், பனிமுகில்போல் மேனிப் பவந்த நாதர்நெல் மலிந்த நெய்த்தானம், சோற்றுத் துறை, நியமம், துருத்தியும், நீடூர், பாச்சில்,கல் மலிந்து ஓங்கு கழுநீர்க் குன்றம், கடல் நாகைக் காரோணம், கைவிட்டு, இந்நாள்பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் “புறம்பயம் நம் ஊர்”என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச் சிரமாலை சூடிச் சிவந்த மேனிமத்தகத்த யானை யுரிவை மூடி மடவா ளவளோடு மானொன் றேந்திஅத்தவத்த தேவர் அறுப தின்மர் ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
செத்தவர் தம் தலைமாலை கையில் ஏந்திச், சிரமாலை சூடிச், சிவந்த மேனிமத்தகத்த யானை உரிவை மூடி, மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி,அத்தவத்த தேவர் அறுபதின்மர் ஆறு நூறாயிரவர்க்கு ஆடல் காட்டிப்,புத்தகம் கைக்கொண்டு, புலித்தோல் வீக்கிப், “புறம்பயம் நம் ஊர்”என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப் பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத் துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
நஞ்சு அடைந்த கண்டத்தர், வெண்நீறு ஆடி, நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டிப்,பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆகப், “பராய்த்துறையேன்” என்று ஓர் பவள வண்ணர்துஞ்சு இடையே வந்து, துடியும் கொட்டத், துண்ணென்று எழுந்திருந்தேன்; சொல்ல மாட்டேன்;புன்சடையின் மேல்ஓர் புனலும் சூடிப், “புறம்பயம் நம் ஊர்”என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு திருமுண்ட மாவிட்ட திலக நெற்றிநெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி, “மறைக்காட்டேன்” என்று ஓர் மழலை பேசிச்,செறி இலங்கு திண்தோள் மேல் நீறு கொண்டு, திருமுண்டமா இட்ட திலக நெற்றிநெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று, நெடுங்கண் பனிசோர, நின்று நோக்கிப்,பொறிஇலங்கு பாம்பு ஆர்த்துப், பூதம் சூழப், “புறம்பயம் நம் ஊர்”என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டுகொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங் குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கைநல்லாளை நல்லூரே தவிரே னென்று நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப்பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி, நிரை வளையார் பலிபெய்ய நிறையும் கொண்டு,கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும், குடமூக்கில் அங்குஒழியக் “குளிர் தண் பொய்கைநல்லாடை, நல்லூரே, தவிரேன்” என்று நறையூரில் தாமும் தவிர்வார் போலப்,பொல்லாத வேடத்தர், பூதம் சூழப், “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத் திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்அரையேறு மேகலையாள் பாக மாக ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
விரை ஏறு நீறுஅணிந்து,ஓர் ஆமை பூண்டு, வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தித்,திரை ஏறு சென்னிமேல் - திங்கள் தன்னைத் திசைவிளங்க வைத்து,உகந்த செந்தீ வண்ணர்,அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர்இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்புரைஏறு தாம் ஏறிப், பூதம் சூழப், “புறம்பயம் நம் ஊர்”என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக் குமரனும் விக்கின விநாய கனும்பூவாய பீடத்து மேல யனும் பூமி யளந்தானும் போற்றி சைப்பப்பாவாய இன்னிசைகள் பாடி யாடிப் பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
சொற்பிரிப்பு
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக் குமரனும், விக்கின விநாயகனும்,பூ ஆய பீடத்து மேல் அயனும், பூமி அளந்தானும், போற்று இசைப்பப்;பா ஆய இன்இசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்,பூஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்கப், “புறம்பயம் நம் ஊர்”என்று போயினாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.