திருமுறை 6 · 6.012 · 10

திருக்கழிப்பாலை

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
கழிப்பாலை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்துதாமெடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் கழிப்பாலை மேய கபாலப் பனார்வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
ஊன்உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து, ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தாமரையினார்,கான் எடுத்து மாமயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபாலப்பனார்;வானிடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும் வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தைபிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை கழிப்பாலை மேய கபாலப் பனார்மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று, முன்னுமாய்ப், பின்னுமாய், முக்கண் எந்தை;பிறை ஆர்ந்த சடைமுடி மேல் பாம்பு, கங்கை, பிணக்கம் தீர்த்து உடன்வைத்தார்; பெரிய நஞ்சுக்-கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை- கழிப்பாலை மேய கபாலப்பனார்;மறைஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை, வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாயஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை ஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப் பனார்வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன் தன்னை நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆயஒளிவண்டு ஆர் கருங்குழலி உமையாள் தன்னை ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்தக்,களிவண்டுஆர் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப்பனார்;வளி உண்டுஆர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொடிநாறு மேனியர் பூதிப் பையர் புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங் கழிப்பாலை மேய கபாலப் பனார்மடிநாறு மேனியிம் மாயம் நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண் நூலர்;அடிநாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்-கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபாலப்பனார்;மடிநாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய் இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்கண்ணானாய் காரானாய் பாரு மானாய் கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்மண்ணானாய் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து, “வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும்எண்ஆனாய் எழுத்துஆனாய் கடல்ஏழ் ஆனாய்! இறைஆனாய்! எம் இறையே! என்று நிற்கும்கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபாலப்பனார்,மண்ஆய மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும் பசுபதி பாசுபதன் தேச மூர்த்திகண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார் கழிப்பாலை மேய கபாலப் பனார்வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரிகதிரோன், எரிசுடரான், விண்ணும் ஆகிப்,பண்அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி; பாசுபதன்; தேச மூர்த்தி;கண்ணப்பன் கண்அப்பக் கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபாலப்பனார்;வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப் பேதப் படுகின்ற பேதை மீர்காள்நிணம்புல்கு சூலத்தர் நீல கண்டர் எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலேகணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார் கழிப்பாலை மேய கபாலப் பனார்மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
பிண ம்புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப் படுகின்ற பேதைமீர்காள்!நிணம் புல்கு சூலத்தர்; நீல கண்டர்; எண்தோளர்; எண்நிறைந்த குணத்தினாலேகணம் புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபாலப்பனார்;மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இயல்பாய ஈசனை எந்தை தந்தை என்சிந்தை மேவி யுறைகின் றானைமுயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபாலப் பனார்மயலாய மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
இயல்பாய ஈசனை, எந்தை தந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை,முயல்வானை, மூர்த்தியைத், தீர்த்தம் ஆன தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன்-கயல்பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபாலப்பனார்;மயல் ஆய மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங் காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்கற்றதோர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபாலப் பனார்மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தை செய்து, “சிவமூர்த்தி” என்று எழுவார் சிந்தையுள்ளால்உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம் எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம்கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்- கழிப்பாலை மேய கபாலப்பனார்;மற்று இதுஓர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன் புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாகஇருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும் ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு கால்விரலா லூன்று கழிப்பா லையார்வருதலங்க மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே.
சொற்பிரிப்பு
பொருது அலங்கல் நீள் முடியான் - போர்அரக்கன்- புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,இருநிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும், ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்கரதலங்கள் கதிர்முடி ஆறு - அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.