திருமுறை 6 · 6.011 · 10

திருப்புன்கூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
புன்கூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்திறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப், பேணாதார் அவர் தம்மைப் பேணாதானைத்,துறவாதே கட்டு அறுத்த சோதியானைத், தூ நெறிக்கும் தூநெறியாய் நின்றான் தன்னைத்,திறமாய எத்திசையும் தானே ஆகித் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நிறமாம் ஒளியானை, நீடூரானை, நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பின்றானும் முன்றானு மானான் றன்னைப் பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் றன்னைநன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகி நல்வினையுந் தீவினையு மானான் றன்னைச்சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநின்றாய நீடூர் நிலாவி னானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னைப், பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை,நன்று அங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னைச்,சென்று ஓங்கி விண்அளவும் தீ ஆனானைத், திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நின்றுஆய நீடூர் நிலாவினானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை இனியநினை யாதார்க் கின்னா தானைவல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம் மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநெல்லால் விளைகழனி நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
இல்லானை,- எவ்விடத்தும்,- உள்ளான் தன்னை; இனிய நினையாதார்க்கு இன்னாதானை;வல்லானை, வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம்; மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானைச்;செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைத்; திருப்புன்கூர் மேவிய சிவலோகனை;நெல்லால் விளைகழனி நீடூரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே.!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக் கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்பலவாய வேடங்கள் தானே யாகிப் பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்சிலையாற் புரமெரித்த தீயா டியைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநிலையார் மணிமாட நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானைக்; கடு நரகம் சாராமே காப்பான் தன்னைப்;பலவாய வேடங்கள் தானே ஆகிப்; பணிவார்கட்கு அங்குஅங்கே பற்று ஆனானைச்;சிலையால் புரம் எரித்த தீ ஆடியைத்; திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நிலை ஆர் மணிமாட நீடூரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானைஆக்காதே யாதொன்று மாக்கி னானை அணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத்தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநீக்காத பேரொளிசேர் நீடு ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
நோக்காதே எவ்வளவும் நோக்கினானை, நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை,ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை, அணுகாதார் அவர் தம்மை அணுகாதானைத்,தேக்காதே தெண்கடல் நஞ்சு உண்டான் தன்னைத், திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நீக்காத பேர்ஒளி சேர் நீடுரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்த முடையானை முடைநாறும் புன்க லத்தில்ஊணலா வூணானை யொருவர் காணா உத்தமனை யொளிதிகழும் மேனி யானைச்சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநீணுலா மலர்க்கழனி நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
பூண் அலாப் பூணானைப், பூசாச் சாந்தம் உடையானை, முடை நாறும் புன்கலத்தில்ஊண் அலா ஊணானை, ஒருவர் காணா உத்தமனை, ஒளி திகழும் மேனியானைச்,சேண் உலாம் செழும்பவளக் குன்று ஒப்பானைத், திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நீண் உலாம் மலர்க்கழனி நீடூரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

உரையார் பொருளுக் குலப்பி லானை ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னைப்புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப் புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னைத்திரையார் புனல்சேர் மகுடத் தானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநிரையார் மணிமாட நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை, ஒழியாமே எவ்உருவும் ஆனான் தன்னைப்,புரை ஆய்க் கனம்ஆய் ஆழ்ந்து ஆழாதானைப், புதியனவும் ஆய் மிகவும் பழையான் தன்னைத்,திரை ஆர் புனல்சேர் மகுடத்தானைத், திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நிரை ஆர் மணிமாட நீடூரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கை மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர் அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச்சீரரவக் கழலானை நிழலார் சோலைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநீரரவத் தண்கழனி நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
கூர் அரவத்து அணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடிச் சென்று அறிய மாட்டார்;ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார்? தேவர், “அறிவோம்” என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகாச்சீர் அரவக் கழலானை, நிழல் ஆர் சோலைத் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நீர் அரவத் தண்கழனி நீடூரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக் கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்னபொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன்செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
கை எலாம் நெய் பாயக், கழுத்தே கிட்டக், கால் நிமிர்த்து, நின்று உண்ணும் கையர் சொன்னபொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்;செய் எலாம் செழுங்கமலப் பழன வேலித் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னைநகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனை நலனழித்து நன்கருளிச் செய்தான் றன்னைத்திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனைநிகழுமா வல்லானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே.
சொற்பிரிப்பு
இகழும் ஆறு எங்ஙனே? ஏழை நெஞ்சே! இகழாது பரந்து ஒன்றாய் நின்றான் தன்னை,நகழமால் வரைக்கீழ்இட்டு, அரக்கர் கோனை நலன் அழித்து நன்குஅருளிச் செய்தான் தன்னைத்,திகழும்மா மதகரியின் உரி போர்த்தானைத், திருப்புன்கூர் மேவிய சிவலோகனை,நிகழுமா வல்லானை, நீடூரானை,- நீதனேன் என்னே நான் நினையாவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.