திருமுறை 6 · 6.010 · 10

திருப்பந்தணைநல்லூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
பந்தணைநல்லூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப் பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடிஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார் அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
நோதங்கம் இல்லாதார்; நாகம் பூண்டார்; நூல் பூண்டார்; நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்;பேய்தங்கு நீள்காட்டில் நட்டம் ஆடிப்; பிறைசூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி;ஆதங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்; அனல் கொண்டார்; அந்திவாய் வண்ணம் கொண்டார்;பாதங்கம் நீறு ஏற்றார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார் - பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார் களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாகஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார் உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற்பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்பாடலா ராடலார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
காடு அலால் கருதாதார்; கடல் நஞ்சு உண்டார்; களிற்று உரிவை மெய் போர்த்தார்; கலன் அது ஆக;ஓடு அலால் கருதாதார்; ஒற்றியூரார்; உறுபிணியும் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்பீடுஉலாம் தனைசெய்வார்; பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி, குழலும், ஓங்கப்பாடலார்; ஆடலார்; பைங்கண் ஏற்றார்; பலிஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பூதப் படையுடையார் பொங்கு நூலார் புலித்தோ லுடையினார் போரேற் றினார்வேதத் தொழிலார் விரும்ப நின்றார் விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடிஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார் உம்பரோ டம்பொன் னுலக மாண்டுபாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
பூதப் படைஉடையார்; பொங்கு நூலார்; புலித்தோல் உடையினார்; போர் ஏற்றினார்;வேதத் தொழிலார் விரும்ப நின்றார்; விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி,ஓதத்து ஒலிகடல்வாய் நஞ்சம் உண்டார்; உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டுபாதத்தொடு கழலார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார் நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார் ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்வாருலா முலைமடவாள் பாக மேற்றார் மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
நீர் உலாம் சடைமுடி மேல் - திங்கள் ஏற்றார்; நெருப்பு ஏற்றார், அங்கையில்; நிறையும் ஏற்றார்;ஊர் எலாம் பலி ஏற்றார்; அரவம் ஏற்றார்; ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்;வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்; மழு ஏற்றார்; மான்மறி ஓர் கையில் ஏற்றார்;பார் உலாம் புகழ் ஏற்றார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார் துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார் அருக்கனா யாரழலாய் அடியார் மேலைப்பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்; துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்;இண்டைச் சடைமுடியார்; ஈமம் சூழ்ந்த இடுபிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்;அண்டத்துக்கு அப்புறத்தார்; ஆதி ஆனார்; அருக்கனாய், ஆர்அழலாய், அடியார் மேலைப்பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கடமன்னு களியானை யுரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல் செய்துமடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார் மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காணநடமன்னி யாடுவார் நாகம் பூண்டார் நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்; கானப்பேர் காதலார்; காதல் செய்துமடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்; மான் உரி-தோல் மிசைத் தோளார்; மங்கை காணநடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;படம் மன்னு திருமுடியார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

முற்றா மதிச்சடையார் மூவ ரானார் மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்கற்றார் பரவுங் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய் தோளிபற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார் பான்மையா லூழி உலக மானார்பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
முற்றா மதிச்சடையார், மூவர் ஆனார்; மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்;கற்றார் பரவும் கழலார்; திங்கள் கங்கையாள், காதலார்; காம்பு ஏய் தோளிபற்று ஆகும் பாகத்தார்; பால்வெண் நீற்றார்; பான்மையால் ஊழி, உலகம், ஆனார்;பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார் பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்மண்ணவரும் வானவரும் மற்றை யோரும் மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
கண் அமரும் நெற்றியார்; காட்டார்; நாட்டார்; கனமழுவாள் கொண்டது ஓர் கையார்; சென்னிப்பெண் அமரும் சடைமுடியார்; பேர் ஒன்று இல்லார்; பிறப்பு இலார்; இறப்பு இலார்; பிணி ஒன்று இல்லார்;மண்ணவரும், வானவரும், மற்றையோரும், மறையவரும், வந்து எதிரே வணங்கி ஏத்தப்பண் அமரும் பாடலார்; பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஏறேறி யேழுலகு மேத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்நீறேறு மேனியார் நீல முண்டார் நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்; இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்;நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு உண்டார்; அங்கை அனலும் உண்டார்;ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்;பாறு ஏறு வெண்தலையார்; பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார் காரோணங் காதலார் காதல் செய்துநல்லூரார் ஞானத்தார் ஞான மானார் நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்மல்லூர் மணிமலையின் மேலி ருந்து வாளரக்கர் கோன்றலையை மாளச் செற்றுப்பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
சொற்பிரிப்பு
கல் ஊர் கடிமதில்கள் மூன்றும் எய்தார்; காரோணம் காதலார்; காதல் செய்துநல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;மல்ஊர் மணிமலையின் மேல் இருந்து, வாள்அரக்கர் கோன் தலையை மாளச் செற்றுப்,பல்ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார் - பந்தணை நல்லூராரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.