1
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக் கடியதோர் விடையேறிக் காபா லியார்சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்றஅண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.
சொற்பிரிப்பு
வண்ணங்கள் தாம்பாடி, வந்து நின்று, வலிசெய்து, வளைகவர்ந்தார் - வகையால் நம்மைக்கண்அம்பால் நின்றுஎய்து, கனலப் பேசிக், கடியதுஓர் விடைஏறிக் காபா லியார்;சுண்ணங்கள் தாம்கொண்டு துதையப் பூசித் தோல்உடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்றஅண்ணலார் போகின்றார்; வந்து காணீர்- அழகியரே, ஆமாத்தூர் ஐய னாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.