1
விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப்பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்றகற்றூண்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
சொற்பிரிப்பு
விற்றுஊண்ஒன்று இல்லாத நல்கூர்ந் தான்காண், வியன்கச்சிக் கம்பன்காண், பிச்சை அல்லால்மற்றுஊண்ஒன்று இல்லாத மாசது ரன்காண், மயானத்து மைந்தன்காண், மாசுஒன்று இல்லாப்பொன்-தூண்காண், மாமணிநல் குன்றுஒப் பான்காண், பொய்யாது பொழில்ஏழும் தாங்கி நின்றகல்-தூண்காண் - காளத்தி காணப் பட்ட கணநாதன் காண்;அவன்என் கண்உ ளானே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.